Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கோபத்தில் ஈஸ்வரி. அதிர்ச்சியில் பாக்கியா.இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் பாக்யா வீட்டில் இருந்து எல்லோரும் ஜெனி வீட்டிற்கு பேச வந்திருக்க ஜோசப் இதுவும் பேசுறதுக்கு இல்ல என்று அவமானப்படுத்தி பேசுகிறார்.

இதனால் அவருக்கும் ஈஸ்வரிக்கும் இடையே வாக்குவாதம் அதிகமாக ஒரு கட்டத்தில் ஈஸ்வரி விவாகரத்துன்னு வந்தா குழந்தை யாரு கிட்ட இருக்க வேண்டும் பேச்சு வரும், அது எங்க வீட்டு வாரிசு செழியன் கிட்ட தான் இருக்கும் நாங்களும் பார்க்க வேண்டிய இடத்தில் பாத்துக்குறோம் என்று சொல்லி கோபமாக அங்கிருந்து கிளம்புகின்றனர்.

ஜெனி யாரைக் கேட்டு டிவோர்ஸ் அனுப்புனீங்க என்று கோபப்பட உனக்கு எதுவும் தெரியாது, நீ நாங்க சொல்றத மட்டும் கேளு என்று ஜோசப் சொல்லிவிடுகிறார். இந்த நேரம் பார்த்து செழியன் போன் செய்ய ஜோசப் போனை வாங்கிவிட ஜெனி ஃபோனை குடுங்க டாடி என்று கேட்டுக்கொண்டே இருக்க யாரும் அவன் கிட்ட பேசக்கூடாது என்று போனை தூக்கி போட்டு உடைத்து ஜெனிக்கு அதிர்ச்சி கொடுக்கிறார்.

மறுபக்கம் வீட்டுக்கு வந்த ஈஸ்வரி இனிமே பேசறதுக்கு எதுவும் கிடையாது, நாமளே விவாகரத்து கொடுத்துட்டு செழியனுக்கு வேற ஒரு பெண்ணை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது தான் என ஷாக் கொடுக்கிறார்.

இதையெல்லாம் கேட்டா செழியன் ஜெனி இதுக்கு எப்படி ஒத்துக்கிட்டானு நான் கேட்கணும் என்று கோபமாக வீட்டிற்கு கிளம்பி செல்கிறார். எழில் கூடச் செல்ல பாக்யா ஒரு பக்கம் உட்கார்ந்து கலங்கி அழ இன்னொரு பக்கம் ஈஸ்வரி கண்கலங்குகிறார்.

பிறகு பாக்கியா என்ன செய்வது என யோசனையில் இருக்க அப்போது கணேஷ் போன் செய்ய பக்கத்துல அமிர்தா இருக்க அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Baakiyalakshimi Serial episode update
Baakiyalakshimi Serial episode update