Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வருத்தத்தில் செழியன். பாக்கியா குறித்து பெருமையாக பேசிய ராதிகா.இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்கியா அர்த்தம் மட்டும் வரல என எழில் இடம் சொல்லி வருத்தப்பட செழியன் பின்னாடி வந்து நின்று சர்ப்ரைஸ் கொடுத்து வாட்ச் ஒன்றையும் கிப்டாக கொடுக்கிறார்.

அதைத் தொடர்ந்து ஜெனி பொருட்காட்சிக்கு வர உள்ளே செழியன் இருப்பதை பார்த்து அப்படியே திரும்பி விடுகிறார். அதைப் பார்த்து அமிர்தா ஓடிப்போய் ஜெனியை தடுத்து நிறுத்தி உள்ளே கூப்பிட ஜெனி வேண்டாம் நான் வரல ஆன்ட்டி கூப்பிட்டாங்கன்னு வந்தேன் இந்த கிப்ட்டை மட்டும் அவங்க கிட்ட கொடுத்து வாழ்த்து சொல்லிடுங்க என்று சொல்லி கிளம்ப அமிர்தா வந்து விஷயத்தை சொல்ல செழியன் வருத்தப்பட்டு நிற்க பாக்கியா ஓடிப்போய் பார்க்க அதற்குள் ஜெனி கிளம்பி விடுகிறார்.

பிறகு ராதிகா பொருட்காட்சிக்கு வர பாக்கியம் ஓடிப்போய் வரவேற்க நான் ஒன்னும் உங்கள பாக்க வரல பொருட்காட்சிக்கு வந்தேன், என் கூட வந்தாங்க பசிக்குதுன்னு சொல்லவே இங்க வந்தேன் என சொல்கிறார். பிறகு பாக்யா பழனிச்சாமியாருக்கு சென்று உட்கார அவர் எப்ப நீங்க உங்களால உங்க வாழ்க்கை எப்படி இங்கு வாழ அவங்களோட சகஜமாக இருக்க முடியுது என்று கேட்க பாக்கியா கல்யாணத்துக்கு முன்னாடியே அவங்கள எனக்கு நல்லா தெரியும் நான் இந்த நிலைமைக்கு வர அவங்க தான் முக்கியமான காரணம் என ராதிகா பற்றி பெருமையாக பேசுகிறார்.

பிறகு பழனிச்சாமி ராதிகா கிட்டயும் இதே கேள்வியை கேட்க அவரும் எனக்கு பாக்யாவை கல்யாணத்துக்கு முன்னாடி தெரியும். என் வாழ்க்கையில நிறைய பிரச்சனைகளை சந்தித்த போது எனக்கு பாக்கிதான் ஆறுதலா இருந்தாங்க ஒரு அக்கா மாதிரி இருந்தாங்க என பெருமையாக சொல்கிறார். பிறகு உங்களுக்கும் பாக்யாவுக்கும் ஒரு நல்ல சீட்டிற்கு நீங்க ஏன் உங்களை கல்யாணம் பண்ணிக்க கூடாது என்று சொல்லி பழனிச்சாமிக்கு அதிர்ச்சி கொடுக்கிறார் ராதிகா. இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Baakiyalakshimi serial episode update
Baakiyalakshimi serial episode update