தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் பாக்கியலட்சுமி அம்மாவுக்கு போன் போட்டு பேச உங்களுக்கு என்ன நிலைமை ஏற்பட்டது அதே நிலைமைதான் இன்னைக்கு ஜெனிக்கும் உருவாக்கி இருக்கு உங்கள நம்பித்தான் அவளை நான் அந்த வீட்டுக்கு அனுப்பி வச்சேன். ஆனா நீங்களே உங்க பையனுக்கு துணை போயி ஜெனிக்கு துரோகம் பண்ணிட்டீங்க இனிமே யாரும் போன் பண்ணாதீங்க அடுத்து என்ன பண்ணனும்னு நாங்க முடிவு பண்ணிக்கிறோம் என சொல்லி போனை வைக்கிறார்.
ஈஸ்வரி செழியனை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்க ராதிகா வெளிய வர நீ எதுக்கு வெளிய வந்த என கோபப்பட நான் ரூமுக்குள்ளயே இருப்பேனே அக்ரிமெண்ட் ஒன்னும் எழுதி செயின் போடலையே என பதிலளிக்கிறார்.
பிறகு கோபி செழியன் கூட்டி வர நீ எதுக்குடா அந்த வீட்டுக்கு போன? செய்யக்கூடாத தப்புதான் செஞ்சிட்டேன் அதுக்காக இங்க பட்ட அவமானம் எல்லாம் போதாதா என பேச ராதிகா கோபப்பட்டு பேச வர கோபி கையெடுத்து கும்பிட்டு பேசாத என சைகை காட்டுகிறார்.
அதைத்தொடர்ந்து பாக்கியா கிச்சனில் சோகமாக உட்கார்ந்து கலங்கிக் கொண்டிருக்க ராதிகா டீ போட்டு பாக்யாவின் பக்கத்தில் வைத்துவிட்டு அவரும் அங்கேயே உட்காருகிறார்.
அதைத்தொடர்ந்து செழியன் பாக்கியா காலில் விழுந்து மன்னிப்பு கேட்க பாக்யா இந்த உலகத்திலேயே யாரும் வெறுக்காத அளவுக்கு உன்னை வெறுக்கிறேன் போடா என திட்டி துரத்துகிறார். அதைத் தொடர்ந்து ஈஸ்வரி பாக்யாவை கூப்பிட்டு நான் ஜெனியை போய் பார்த்து பேச போறேன் நீயும் என் கூட வா என்று கூப்பிட நான் வரமாட்டேன் என சொல்கிறார்.
நீ சொன்ன ஜெனி கேப்பா அவ எதுக்கு அவங்க அம்மா வீட்டுக்கு போனோம் கோபப்பட்டா கூட இந்த வீட்டில் இருந்து கோபப்படட்டும் நீ என் கூட வந்து தான் ஆகணும் நாம போய் பேசி அவளை கூட்டிட்டு வரலாம் என்று சொல்ல ராமமூர்த்தியும் இப்போதைக்கு வேண்டாம் என சொல்ல ஈஸ்வரி அப்படியே விட முடியாது என கூறுகிறார்.
ஆனால் பாக்கியம் நான் வரமாட்டேன் அத்தை என்ன எப்படி நீங்க இதே மாதிரி நிலைமை இல்ல இந்த வீட்ல இருக்க வச்சீங்களோ அதே மாதிரி ஜெனியையும் இருக்க வைக்கணும்னு நினைக்காதீங்க அதுக்கு நான் விடமாட்டேன் என அதிர்ச்சி கொடுக்கிறார். இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
MYSAA Teaser (Tamil) | Rashmika | Rawindra Pulle | Jakes Bejoy | UnFormula Films
Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S
Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja
லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…
முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…