கோபியை திட்டிய ஈஸ்வரி. வில்லனாக மாறிய கோபி.இன்றைய பாகியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்யா வீட்டுக்கு வந்த கோபி உன்னுடைய லைப் எப்படி பழனிச்சாமி கிட்ட போச்சு அதுக்கு பதில் சொல்லு என கேள்வி கேட்டு நச்சரித்த நிலையில் எழில் என்ட்ரி கொடுக்க வாடா அம்மா புள்ள என்று கோபி அவனையும் கூப்பிட்டு உங்க அம்மாவோட லைசென்ஸ் எப்படி அந்த பழனிச்சாமி கிட்ட போச்சு இன்னும் என்னெல்லாம் கொடுத்து வச்சிருக்க என்று கேள்வி கேட்க அதற்கு நான் பதில் சொல்லட்டுமா என்று அதிர்ச்சி கொடுக்கிறார்.

அந்த லைசன்ஸ் ஒன்னும் நேரா அவர் கிட்ட போகல ரெண்டு துண்டா போச்சு ஏதாவது புரியுதா என்று கேட்க கோபி ஒன்றும் புரியாமல் இருக்க யாரோ ஒருத்தர் வீடு புகுந்து லைசென்ஸ் திருடி அது இரண்டாக உடைத்து போட அதுதான் பழனிச்சாமி சார்கிட்ட போய் இருக்கு என்று சொல்கிறார்.

அமிர்தா என்ன சொல்றீங்க எங்களுக்கு எதுவுமே புரியல என்று சொல்ல எழில் கோபி விடு புகுந்து லைசென்ஸ் திருடிய பிறகு தன்னுடைய நண்பனை சந்தித்து அம்மா நடுரோட்டில் நிக்கணும் போலீஸ் கைது பண்ணனும்னு நெனச்சு போட்ட பிளானை கூறுகிறார். இதைக் கேட்டு எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். மேலும் இவர் போன அதே ஹோட்டலுக்கு எதிர்பாராத விதமா பழனிச்சாமி சாரும் போயிருக்கிறார் இவர் பேசுனது எல்லாத்தையும் கேட்டிருக்கிறார். இவர் உடைத்து தூக்கி போட்ட லைசன்ஸ் எடுத்து தான் அவர் போட்டோ அனுப்பி இருக்கார் என்று சொல்கிறார்.

இதைக் கேட்ட பாக்கியா இவ்வளவு நாளா நீங்க ஏமாற்றுக்காரர் என்று மட்டும் தான் நினைச்சுட்டு இருந்தேன் ஆனா இப்படி திருட்டு புத்தியும் இருக்கணும் தெரியாம போச்சு என்று பாக்கியா பதிலடி கொடுக்க ஈஸ்வரி அப்போ நீ கார் அனுப்பினது எங்க மேல இருக்க அக்கறை இல்ல பாக்யாவை நடுரோட்டில் நிற்கவைக்கணும்னு தானா? உனக்கு எங்க இருந்து இந்த புத்தி எல்லாம் வந்துச்சு என ஈஸ்வரி கேள்வி கேட்டு திட்டுகிறார்.

பிறகு எழில் ராமமூர்த்தி இருவரும் வீட்டை விட்டு வெளியே போடா என்று திட்டி வெளிய அனுப்ப கோபி உச்சகட்ட டென்ஷனுடன் வர எதிரே ராதிகா வந்து நிற்க அதிர்ச்சி அடைகிறார். பிறகு வீட்டுக்கு போன கோபி ராதிகாவிடம் பாக்கியா ஆபீஸ்க்கு வந்து என்கிட்ட சவால் விட்டா அதான் போய் நாலு வார்த்தை நருக்குனு கேட்டுட்டு வந்தேன் என்று சொல்கிறார்.

அவ நல்லாவே இருக்கக்கூடாது அழியனும் அவ அழிகிறது பார்த்து நான் சந்தோஷப்படணும் என முழு வில்லனாக ஆக்ரோஷப்படுகிறார். ஆடி மனசுல இருந்து சொல்றேன் எனக்கு ஒரு ஆசை இருக்கு ஏன் அம்மா அப்பா பசங்க நீ நான் மயூ என எல்லாரும் ஒரே குடும்பமா வாழனும் என்று கூறுகிறார்.

இங்கே பாக்கியா நான் என்ன தப்பு பண்ண என்று பீல் செய்கிறார். நாம அமைதியா அடங்கி போறதுக்கு நான் தான் இப்படி எல்லாம் நடக்குது இனி அப்படி இருக்க கூடாது என்று முடிவெடுக்கும் பாக்கியம் ஒரு நிமிஷம் வந்துறேன் என சொல்லி வேக வேகமாக ராதிகா வீட்டுக்கு வந்து கதவை தட்டி அதிர்ச்சி கொடுக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Baakiyalakshimi serial episode update
jothika lakshu

Recent Posts

கிஸ் : 3 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வாங்க பார்க்கலாம்.!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் கவின்.இவரது நடிப்பில் கிஸ் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது சதீஷ் கிருஷ்ணன்…

55 minutes ago

முத்து,மீனா சொன்ன வார்த்தை.. விஜயா கேட்ட கேள்வி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவின் பிரண்ட்ஸ்…

1 hour ago

பிஸ்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

பிஸ்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…

15 hours ago

ரோபோ ஷங்கர் குறித்து எமோஷனலாக பதிவை வெளியிட்ட இந்திரஜா.!!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர் ஆக கலக்கிய ரோபோ சங்கர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்து படங்களின்…

15 hours ago

கண் முழித்த நந்தினி, சுந்தரவல்லி சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

16 hours ago

Right Movie Press Meet

[Best_Wordpress_Gallery id="1009" gal_title="Right Movie Press Meet"]

18 hours ago