தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் கோபி ஹோட்டலில் தன்னுடைய நண்பர் சதீஷை சந்தித்து லைசென்ஸ் காணாமல் போன விஷயத்தை சொல்லி பாக்கியா சிக்கிக்கொண்டு தவிக்கப் போவதை எண்ணி சந்தோஷமாக பேசுகிறார்.
அப்போது ஹோட்டலுக்கு பழனிசாமி வர இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளாமல் இருந்து விடுகின்றனர். ஒரு பக்கம் எழில், அமிர்தா, ராமமூர்த்தி என எல்லோரும் லைசன்ஸ் தேடியும் கிடைக்காமல் தவிக்க இங்கே போலீஸ் இன்னமும் டைம் கொடுக்க முடியாது எதுவாக இருந்தாலும் ஸ்டேஷன் வந்து பேசிக்கோங்க என்று மிரட்டுகின்றனர். இங்கே ஹோட்டலில் வெளியே வந்த கோபி அந்த லைசென்ஸ் எங்க தேடியும் கிடைக்காது என்று தன்னுடைய பாக்கெட்டில் இருந்து எடுத்துக்காட்ட அதை பழனிச்சாமி பார்த்து அதிர்ச்சி அடைகிறார். அந்த பாக்கியா கைதாகி ஸ்டேஷனில் உக்காந்தா கூட எனக்கு கவலை கிடையாது சந்தோஷம் தான் என கோபி முழு வில்லத்தனத்தை காட்டி லைசென்ஸை உடைத்து தூக்கிப்போட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.
இந்த லைசென்ஸ் எடுத்து போட்டோ எடுக்கும் பழனிச்சாமி அதை இனியாவுக்கு அனுப்பி வைக்க பாக்கியா வேறு வழி இல்லாமல் ஸ்டேஷன் செல்ல ஜீப்பில் ஏறும் போது பழனிச்சாமி போன் செய்து இனியாவிடம் லைசென்ஸ் அனுப்பிட்டேன் என்று சொல்ல பிறகு போலீஸ் லைசன்ஸ் பார்த்து எங்க கிளம்பினாலும் லைசென்ஸை கையில வச்சுக்கோங்க என அறிவுரை கூறுகின்றனர்.
அதோடு சிசிடிவி ஃபுட்டேஜ் பார்த்ததில் இவங்க மேல எந்த தப்பும் இல்லை என இன்னொரு போலீஸ் வந்து சொல்ல இவர்களை கிளம்பி செல்ல சொல்கின்றனர். நான்கு பேரும் சந்தோஷமாக சென்னைக்கு கிளம்பி வர கோபி இனியாவுக்கு போன் செய்து டிரைவர் உங்களை பிக்கப் பண்ணிக்கினாரா என்று கேட்க நாலு பேரும் வந்துகிட்டு இருக்கோம் பழனிச்சாமி லைசன்ஸ் அனுப்பிட்டாரு என்று சொல்ல கோபி உச்சகட்ட டென்சன் அடைகிறார்.
என்னுடைய பிளான் நாசமா போச்சு என்று புலம்புகிறார். இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Page: 1 2
கருவேப்பிலை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
இன்றைய நான்காவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
பிரதீப் ரங்கநாதன் நண்பர்களுடன் சேர்ந்து சர்ப்ரைஸ் டியூட் என்ற பெயரில் பலருக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் செய்து வருகிறார். இவருக்கு உறுதுணையாக…
வடசென்னையின் கடலோர பகுதியில் கடலை ஒட்டி கச்சா எண்ணெய் குழாய் இணைப்பு கொண்டு வரப்படுகிறது. இந்த திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம்…
கிராமத்தில் வாழ்ந்து வரும் நாயகன் துருவ் விக்ரம் பள்ளியில் படித்து வருகிறார். இவருக்கு கபடி ஆட மிகவும் பிடிக்கும். கபடி…
டியூட் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…