ஈஸ்வரி சாமியார் கெட்டப்பில் வந்து ஷாக் கொடுக்க ராதிகா வம்பிழுத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி சாமியார் கெட்டப்பில் வந்து இறங்க எல்லாரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
முன்பை காட்டிலும் முழுக்க முழுக்க அப்படியே மாறி அதிர்ச்சி தருகிறார். ஓம் நமசிவாய மந்திரத்தை விடாமல் சொல்கிறார். காபி, டீ கூட குடிக்கிறது இல்லை, துளசி தீர்த்தம் வேண்டும் என சொல்கிறார். ஈஸ்வரியின் மாற்றத்தால் எல்லாம் ஷாக்காகின்றனர்.
மறுபக்கம் பாக்கியா காலேஜில் கிளாஸ் ரூமுக்குள் வந்து முதல் பெஞ்சில் உட்கார போக அங்கிருந்த பெண் பையை தூக்கி வைத்து ஆள் வராங்க என இடம் தர மறுக்கிறார். அடுத்ததாக பாக்கியா அடுத்த பெஞ்சில் சென்று அமர்கிறார். ப்ரொபசர் வந்து எல்லோரையும் பற்றி இன்ட்ரோ கொடுக்க சொல்ல எல்லாரும் தங்களை அறிமுகம் செய்து கொள்கின்றனர்.
அடுத்ததாக பாக்கியா எல்லாரது பெயரையும் சரியாக சொல்லி வியக்க வைக்கிறார். 25 வருட இடைவெளிக்குப் பிறகு படிக்க வந்திருப்பதை பாராட்டுகின்றனர்.
கேண்டீனில் ராதிகா தோசை கேட்க சிலிண்டர் காலியாகி அதை மாற்றி தயார் செய்து தருவதற்கு நேரமாவதால் செல்வியுடன் வாக்குவாதம் செய்கிறார். பாக்கியா இல்லாததால் அவரையும் பிடித்து திட்டுகிறார்.
அடுத்ததாக காலேஜில் பாக்கியாவை பார்த்து வாழ்த்து சொல்ல பழனிச்சாமியும் அவரது அம்மாவும் வந்திருக்கின்றனர். இன்னொரு பக்கம் ஈஸ்வரி இப்படியொரு கெட்டப்பில் வந்திருப்பதை பார்த்து ஆச்சர்யமாக பேச பாக்கியா காலேஜ் போகும் விஷயம் பாட்டிக்கு தெரிந்தால் என்னவாகும் என தெரியாமல் பதறுகின்றனர். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
https://youtu.be/dvAzQ4AW8XI?si=RwyVAUT4ydauDrvI
Rai Rai Raa Raa Song (Tamil) , Peddi ,Ram Charan , Janhvi , Buchi Babu…
Leader - Official Teaser ,Legend Saravanan , R. S. Durai Senthilkumar ,Ghibran Vaibodha https://youtu.be/2bdOxrr7Kvw?si=vUGe3Af95s-SSkqU
டாக்ஸிக் ரிலீஸ் தேதியில் அந்த படத்தை இறக்கும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு! கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும்…
எப்படிப்பட்ட மனைவியாக இருக்க விரும்புகிறீர்கள்? - ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. 'காதல் கல்யாணம்' பற்றி ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. *…