ஷாக்கான ஜெனி.உருவான புது சிக்கல்.இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி குடிபோதையில் உட்கார்ந்து இருக்க பாக்கியா சுடிதாரில் வீட்டுக்கு வர அதை பார்த்து கோபி ஜெனியிடம் ஏதோ ஒரு சின்ன பொண்ணு வந்திருக்கா, உன் கிளாஸ் மேட் போல என சொல்ல ஜெனி ஷாக் ஆகிறார்.

அதற்கு அடுத்ததாக இவளை டிவேர்ஸ் பண்ணிட்டு நாம் சந்தோஷமா இருக்கலாம்னு பார்த்தா இவ சந்தோஷமா இருக்கா, நான் குடிச்சிட்டு புலம்பிக்கொண்டே இருக்கேன், இவ மாடர்ன் மங்கையாக மாறிட்டா என சொல்கிறார்.

பிறகு பாக்கியா, ஜெனி, செல்வி கிச்சனில் இருக்க சமைக்க தேவையான பொருட்களை வாங்கி வரும் ராதிகா கிச்சனில் சப்பாத்தி போட செல்வி அவரை நக்கலடிக்கிறார். அடுத்து ஈஸ்வரியை கூட்டி வந்து அவர் இங்க நீ என்ன பண்ற என கேட்க பார்த்தா தெரியலை, சமைக்கிறேன் அத்தை என சொல்கிறார்.

உடனே ஈஸ்வரி யாருக்கு யார் அத்தை என கோபம் அடைய என் புருஷனுக்கு அம்மானா எனக்கு அத்தை தானே என பதில் அளிக்கிறார். உன்னை தான் இங்க இருந்து எதுவும் எடுக்க கூடாதுனு சொல்லி இருக்கேன்ல என சொல்ல ராதிகா இது எல்லாம் நான் வாங்கி வந்த பொருள் என பதிலடி கொடுக்கிறார். பாக்கியா இதையெல்லாம் பெருசா எடுத்துக்காமல் ஹாயாக டிவி பார்க்கிறார். ‌‌

அடுத்து கோபி ரூமில் இருக்க அங்கு வரும் இனியா அவரது புக்கை எடுக்க வர கோபி உனக்காக தான் இங்க இருக்கேன், டாடி உனக்கு ஒரு போன் வாங்கி தரேன் என பேச அதுவரை சரியாக பேசாத இனியா ராதிகா வந்ததும் அவரை வெறுப்பேத்துவது போல பேசி வெளியே வருகிறார்.

ராதிகா அவ என்கிட்டே பேசல என சண்டை போட்டு சப்பாத்தி கொடுக்க கோபி ஊட்ட சொல்லி சாப்பிடுகிறார். பிறகு இருவரும் படுத்து விட ராதிகா மயு என்னை ரொம்ப மிஸ் பண்றா, நானும் அவளை மிஸ் பண்றேன் என பீல் பண்ண கோபி அப்படினா நீ அங்க போயிடு ராதிகா என சொல்லி கோபி சிக்கி கொள்கிறார்.

நீங்களும் என்னை துரத்துவதிலேயே இருக்கீங்க என ராதிகா சண்டை போட கோபி நாம் ரெண்டு பேரும் அங்க போயிடலாம்னு தான் சொன்னேன் என சமாளிக்க ராதிகா எனக்கு கோபமாக வருது, எனக்காக நீங்க ஏதாவது பண்றீங்களா என ஆவேசப்படுகிறார். ‌‌‌‌ இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshimi serial episode update
jothika lakshu

Recent Posts

கார்த்தி நடிக்கும் வா வாத்தியார் படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?

வா வாத்தியாரே படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி.இவர்…

10 minutes ago

சிந்தாமணி கொடுத்த ஷாக், அதிர்ச்சியில் ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து…

2 hours ago

முடிவை மாற்றிய நந்தினி, சூர்யா எடுத்த முடிவு,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

2 hours ago

நான் ரிசைன் பண்ற.. போட்டியாளர்களிடம் கோபப்பட்ட VJ பார்வதி. வெளியான முதல் ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சி தற்போது 8 சீசன்கள்…

3 hours ago

வெந்தய நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

வெந்தய நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…

18 hours ago

பிரம்மாண்டமாய் புத்தம் புது பொலிவுடன் புதிய கலெக்ஷனில் துணிகளை அள்ளிக்கொள்ள வேலவன் ஸ்டோர்ஸ்க்கு வாங்க..!

நார்த் உஸ்மான் ரோடு, டி நகரில் அமைந்துள்ளது நம்ம வேலவன் ஸ்டோர்ஸ் பொதுமக்கள் சிரமப்படாமல் இருக்கும் வகையில் பிரசாந்த் டவர்ஸ்…

19 hours ago