episode-update-of-sirakadikka-aasai
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்போது பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா தன்னுடைய அம்மாவுடன் வீட்டுக்கு வர அவரது அம்மா அண்ணாமலையிடம் மன்னிப்பு கேட்க அவர் முத்து பண்ணது தப்பு தான், மீனா கேள்வி கேட்டதில் ஒரு நியாயம் இருந்தது என சொல்கிறார். மேலும் அவ என்னை அப்பாவா பாக்குறா, அதுனால தான் உரிமையா பேசிட்டா என சொல்லி முத்துவை மாற்ற என்ன பண்ணலாம்னு நீ இங்க இருந்தே யோசிக்கணும் என அறிவுரை வழங்குகிறார்.
அதன் பிறகு மீனா ரூமுக்கு வர என்ன 4 பாட்டு கூட முடியல, அதுக்குள்ள வந்துட்ட நானே வரணும்னு நினைச்சேன் என சொல்ல மீனா பேசறதெல்லாம் பேசிட்டு வானு கூப்பிட்டா வந்துடணுமா என சொல்ல முத்து அந்த சீனெல்லாம் இங்க கிடையாது, அப்பா கிட்ட மன்னிப்பு கேட்க சொல்லி பார்க்கணும் என நினைத்ததாக சொல்ல கேட்டாச்சு என மீனா பதில் கொடுக்கிறார்.
அதன் பிறகு முத்து என்கிட்ட கேட்டல என சொல்ல நீங்க கேட்டீங்களா என மீனா பதில் சொல்ல முத்து நான் எதுவும் தப்பா பேசல என்று சொல்ல மீனா நானும் எதுவும் தப்பா பேசல என்று சொல்கிறார்.
அதற்கு அடுத்ததாக அண்ணாமலை வீட்டுக்கு பத்திரிகை எடுத்து வந்தவர்கள் மனோஜ்க்கு மீனா பொருத்தமான ஜோடி என பேச முத்து அவர்களிடம் கோபப்படுகிறார். மீனாவையும் வாய்ல என்ன கொழுக்கட்டையா வச்சிட்டு இருக்க என திட்டி மனோஜ் செய்த வேலைகளை போட்டு உடைக்கிறார்.
அடுத்து அண்ணாமலை முத்து தான் மீனா கழுத்தில் தாலி கட்டினான் என சொல்ல அவர்கள் மன்னிப்பு கேட்டு விட்டு கிளம்பி செல்கின்றனர். விஜயா இதுக்கு தான் மனோஜ்க்கு ஒரு கல்யாணம் பண்ணணும் என சொல்ல அண்ணாமலை முதலில் வேலைக்கு போகட்டும் என்று சொல்கிறார்.
இதனை தொடர்ந்து விஜயா பார்வதி கோவிலுக்கு வந்திருக்க பார்வதி வசதியான குடும்பத்தில் ஒரு பெண் இருப்பதாக மனோஜ்க்காக பேசுறேன் என சொல்ல விஜயா சந்தோஷம் அடைகிறார். அவன் வேலைக்கு போகலனாலும் கல்யாணம் பண்ணிடுனும் என சொல்கிறார்.
அடுத்து முத்து ரூமில் டிரெஸ் மாத்த கழுத்தில் செயின் இல்லாததை பார்த்து செயின் எங்கே என கேட்க அடகு வைத்ததை சொல்லாமல் சமாளிக்கிறார். பிறகு சாயங்காலம் பிரண்ட்ஸ் பார்ட்டி வச்ச இருக்காங்க, நாம் போய்ட்டு வரும் போது வெளிய சாப்பிடலாம் என சொல்லி கிளம்ப மீனா சந்தோஷப்படுகிறார்.
பிறகு ரோகினி மனோஜ்க்கு போன் செய்து உங்க கிட்ட பேசணும் என நேரில் வர சொல்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
RANABAALI Teaser (Tamil) - The Savage's Oath | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan
Magale Music Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Balaji Tharaneetharan
ஏ.ஆர்.எம். ஸ்டுடியோஸ் மற்றும் யோகா ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.ஆர். மதியழகன் மற்றும் ஆரத்தி இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘அழகிய…
கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய திரைப்படம் ‘சேயோன்’.…
சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் இந்தியை ‘தேசிய மொழி’ எனக் குறிப்பிட்டதற்கு கன்னட நடிகர் சிவராஜ் குமார் மன்னிப்புக்…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேஷம்’ ஆகிய படங்களை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அவரது 47வது படத்திற்கு ‘SCENE’ என…