Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ராதிகா பேசிய வார்த்தை. கோபிக்கு காத்திருந்த அதிர்ச்சி. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalakshimi serial episode update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் ஈஸ்வரி என்ன கோபி அவ வெளியே போறா தானே என கேட்க ராதிகா நான் எதுக்கு வெளியே போகணும் நான் இங்கதான் இருப்பேன், நான் இருக்கிறது பிடிக்காதவங்க வெளிய போங்க என அதிர்ச்சி கொடுக்கிறார்.

இதனால் குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லோரும் ராதிகாவுக்கு எதிராக பேச ஈஸ்வரி நீ வெளியே போய் தான் ஆகணும் என சொல்ல போகலைன்னா என்ன பண்ணுவீங்க என கேட்க கொலை பண்ணுவேன் என ஈஸ்வரி கோபப்படுகிறார். இந்த நேரம் வீட்டுக்குள் என்ட்ரி கொடுக்கும் ராதிகாவின் அம்மா ஏமாந்தா நீங்க அதையும் பண்ணுவீங்க. இனிமே என் பொண்ணு இந்த வீட்ல தான் இருப்பா, அதை யாராலும் தடுக்க முடியாது என சொல்கிறார்

மேலும் மீறி யாராவது ஏதாவது பண்ண நினைச்சீங்கன்னா போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்து மொத்த பேரையும் உள்ள தள்ளிடுவேன். என் பையனுக்கு நிறைய போலீஸ் தெரியும், நான் இங்கதான் எதிர் வீட்டில்தான் இருப்பேன், என் பொண்ணுக்கு நடக்கிறது எல்லாத்தையும் பாத்துட்டு தான் இருப்பேன் என எச்சரித்து ராதிகா நீ உள்ள போ என சொல்ல அவர் பேக் எடுத்துக் கொண்டு உள்ளே செல்கிறார். ‌‌

பிறகு எல்லோரும் கோபியை ரவுண்டு கட்டி என்ன இதெல்லாம் என கேள்வி மேல் கேள்வி கேட்க அவளை கூட்டிக்கிட்டு நான் வெளியே போகிறேன் என ராதிகாவிடம் பேச மேலே வருகிறார்.

மேலே வந்த கோபி ராதிகாவை சமாதானம் செய்ய முயற்சி செய்ய அவர் நான் இங்கதான் இருப்பேன் என உறுதியாக சொல்கிறார். நீ, நான், மயூரா மட்டும் அந்த வீட்டில சந்தோஷமா இருக்கலாம் என சொல்ல ராதிகா என்ன கட்டாயப்படுத்தி கூட்டிட்டு போனீங்கன்னா நான் சூசைட் பண்ணிப்பேன். என்னுடைய தற்கொலைக்கு நீங்கள் உங்கள் குடும்பம் தான் காரணம் என நீங்க பண்ண எல்லாத்தையும் எழுதி வச்சுட்டு செத்துப் போவேன், அப்புறம் நீங்க குடும்பத்தோட ஜெயிலுக்கு போக வேண்டியது தான் என சொல்லி மிரட்டுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshimi serial episode update

baakiyalakshimi serial episode update