baakiyalakshimi serial episode update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் செழியன் குடிபோதையில் தடுமாறிய கோபியை தனது வீட்டுக்கு அழைத்து வந்த நிலையில் ஈஸ்வரி இனி கோபி இங்கதான் இருப்பான் என முடிவெடுத்தார்.
இதனால் ராதிகா அவரது அம்மாவின் பேச்சைக் கேட்டு தனது துணிமணிகளுடன் ஈஸ்வரி வீட்டிற்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
அந்த வீடியோவில் கோபி நைட்டு என்ன நடந்தது என தெரியாமல் குழம்பி ராதிகா வீட்டுக்கு கிளம்ப ஈஸ்வரி அவனை இங்கேயே இரு என சொல்ல ராதிகா அங்க இருக்கும்போது நான் எப்படி இங்கே இருக்க முடியும் என கோபி சொல்லிவிட்டு கிளம்ப முயற்சி செய்கிறார்.
இந்த நேரத்தில் ராதிகா தனது துணி பேக்கை தூக்கிக்கொண்டு ஈஸ்வரி வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்து நீங்க இங்க தான் இருப்பிங்கன்னா உங்க மனைவி என்ற முறையில் நானும் இங்க தான் இருப்பேன் என சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
ராதிகாவின் இந்த முடிவால் அதிர்ச்சியாகும் பாக்கியா அடுத்து என்ன செய்யப் போகிறார்? கோபி மற்றும் ராதிகாவுடன் சேர்ந்து ஒரே வீட்டில் வாழப்போகிறாரா அல்லது வீட்டை விட்டு வெளியேறப் போகிறாரா என்பதெல்லாம் வரும் நாட்களில் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Boomer Man Official Trailer | Ajith Gill , Karthik Kumar | THI KI | Vivek…
Vel Sevvel Lyrical Video | Arulvaan | Arulnithi, Aarav | GV Prakash Kumar | Ganesh…
பாலிவுட்டின் முன்னணி இளம் நடிகைகளில் ஒருவரான ஜான்வி கபூர், தனது நடிப்பைத் தாண்டி ஸ்டைலிஷ் ஃபேஷன் தேர்வுகளாலும் ரசிகர்களின் கவனத்தை…
தமிழ் சினிமாவில் நட்பு, நகைச்சுவை மற்றும் தெருமுனை கிரிக்கெட்டை அழகாக பதிவு செய்த படங்களில் முக்கியமானது இயக்குநர் வெங்கட் பிரபு…
'பொல்லாதவன்', 'ஆடுகளம்', 'வட சென்னை', 'அசுரன்' உள்ளிட்ட வெற்றிப் படங்களுக்குப் பிறகு, இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் தனுஷ் மீண்டும்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ள 'ட்ரெய்ன்' திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக…