Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கோபியை சந்தித்த ஈஸ்வரி. அதிர்ச்சியில் ராதிகா. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalakshimi serial episode update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி செழியனிடம் கோபிக்கு போன் போட்டு ஏதாவது ஒரு இடத்துக்கு வர சொல்லு, அவனை நான் பார்த்து பேசணும் என சொல்ல செழியன் கோபிக்கு போன் போடுகிறார்.

செழியன் போன் பண்ணுவதை பார்த்த ராதிகா இப்ப எதுக்கு இவன் போன் பண்றான் என கேட்க எனக்கு என்ன தெரியும் என கோபி போனை எடுத்து பேச பாட்டி உங்ககிட்ட பேசணுமாம், நேர்ல வர சொல்றாங்க என சொல்ல கோபி எங்கே என கேட்க பக்கத்தில் உள்ள மாரியம்மன் கோவில் என ஈஸ்வரி சொல்கிறார். பிறகு கோபி பத்து நிமிஷத்துல வரேன் என சொல்லி போனை வைக்கிறார்.

உடனே ராதிகா என்ன விஷயம் என கேட்க அம்மா பேசணுமாம் என சொல்ல இப்ப அந்த வீட்டுக்கு போக போறீங்களா என கேட்க இல்ல பக்கத்துல இருக்க மாரியம்மன் கோவிலுக்கு வர சொல்லி இருக்காங்க நான் போயிட்டு வந்துடறேன் என சொல்லி கோபி கிளம்புகிறார். கோபி கிளம்பி சென்றதும் ராதிகா தன்னுடைய அம்மாவுக்கு போன் போட்டு நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொல்ல அவர் உடனே நான் கிளம்பி வரேன். நீ எக்காரணத்தைக் கொண்டும் அந்த வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என சொல்கிறார். நீ எதுக்கு கோபிய தனியா அவங்க அம்மாவ பாக்க அனுப்பின.. அவரை அவங்க குடும்பத்தோட பேசவே விடக்கூடாது, நீ உடனே கிளம்பி கோவிலுக்கு போ என சொல்ல ராதிகா கிளம்பி கோவிலுக்கு வருகிறார்.

இந்த பக்கம் கோவிலில் ஈஸ்வரி உனக்கு என்ன ஆச்சு என்ன பிரச்சனை ஏன் இப்படி குடிச்சிட்டு ரோட்டில் விழுந்து கிடக்கிற? அந்த விஷயம் கேட்டதும் நான் நொறுங்கிப் போயிட்டேன். அதுக்குள்ளவே இப்படி ரோட்ல சண்டை போடுறீங்க எல்லாரும் வேடிக்கை பாக்குறாங்க. நாளைக்கு நாங்க எப்படி ரோட்ல தல காட்டி நடக்கிறது என திட்ட கோபி இனிமே சத்தியமா குடிக்க மாட்டேன் என மன்னிப்பு கேட்கிறார்.

கோபிக்கு நல்லபடியாக அறிவுரை சொல்லும் ஈஸ்வரி இது எல்லாத்துக்கும் ஒரே ஒரு தீர்வு தான் இருக்கு, நீ நம்ம வீட்டுக்கு வந்தது, இந்த சரி இல்லாத வாழ்க்கை எதற்கு உனக்கு? நான் வீட்ல எல்லார்கிட்டயும் பேசுறேன் நீ வீட்டுக்கு வந்துடு பழைய கோபியா எங்களோட இரு என சொல்ல கோபி அதிர்ச்சி அடைகிறார். இதைக் கேட்ட ராதிகாவும் அதிர்ச்சி அடைகிறார்.

ஆனால் கோபி பதில் எதுவும் பேசாமல் இருக்க ஈஸ்வரி எப்போ வர என கேட்க அப்பவும் அமைதியாகவே இருக்க யோசித்து முடிவு எடு என்று சொல்ல மாட்டேன் உன்னுடைய வாழ்க்கைக்கு நல்ல முடிவு இது மட்டும் தான் என சொல்லி செழியனை அழைத்துக் கொண்டு கிளம்புகிறார்.

இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிய அதைத் தொடர்ந்து வெளியான ப்ரோமோவில் கோபி காரில் ஏற ராதிகாவும் ஓடி வந்து காரில் ஏறி இங்க என்ன நடக்குது எனக்கு தெரிஞ்சாகணும், எனக்கு உங்க அம்மா பேசியது கூட பயம் கிடையாது ஆனால் நீங்கள் அமைதியா இருந்ததுதான் பயமா இருக்கு என சொல்கிறார்.

baakiyalakshimi serial episode update
baakiyalakshimi serial episode update