பாக்யாவிற்கு ராதிகா கொடுத்த ஷாக். இனியா எடுத்த முடிவு. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அமிர்தாவின் அப்பா அம்மா ஊருக்கு கிளம்ப ஈஸ்வரியை பார்க்க ரூமுக்குள் வர அங்கு ஈஸ்வரி நிலாவுடன் விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்து சந்தோஷப்படுகிறார்கள்.

அதன் பிறகு நாங்கள் ஊருக்கு கிளம்புவதாக சொல்லி அமிர்தாவையும் நிலா பாப்பாவையும் நன்றாக பார்த்துக் கொள்வதற்காக நன்றி கூறுகின்றனர். அங்கு வரும் ராமமூர்த்தி இது நம்ம ஊரு பலகாரம் என சொல்லி ஊருக்கு எடுத்து போக சொல்லி கடையில் இருந்து வாங்கி வந்த பலகாரத்தை கொடுக்கிறார்.

அடுத்து இனியா ஸ்கூலுக்கு கிளம்பி தயாராகி இருக்க லஞ்ச் பாக்ஸ் ரெடியானு கேட்க ராதிகா உனக்கு நான் என்ன அம்மாவா? நான் எதுக்கு உனக்கு லஞ்ச் பாக்ஸ் கட்டி தரணும்? இதற்கெல்லாம் மட்டும் நான் தேவையா? என கேட்க இனியா எனக்கு நீங்க இதோட லஞ்ச் கட்டி தர தேவையில்லை என சொல்கிறார். கோபி லஞ்ச் எடுத்துட்டு போக சொல்ல ராதிகா சொன்ன விஷயத்தை சொல்லி இனிமே எனக்கு அவங்க லஞ்ச் கொடுக்க தேவையில்லை. எனக்கு நீங்க காசு கொடுத்துடுங்க தான் கேன்டீன்ல சாப்பிட்டுக்கிறேன் என சொல்கிறார்.

அதன் பிறகு இனியா நான் தாத்தாவோட போறேன் என சொல்லி கிளம்புகிறார். பிறகு கோபி ராதிகாவுடன் அவ சின்ன குழந்தை அவகிட்ட எதுக்கு காலையில் சண்டை போடுற என் கேள்வி கேட்க ராதிகா அவ எனக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்கணும் என சொல்கிறார்.

அடுத்ததாக பாக்கியா கேன்டினில் இருந்து கிளாசுக்கு கிளம்ப அங்கு வரும் ராதிகா இன்னும் இரண்டு நாள்ல பேக்கரி ஐட்டம் எல்லாம் இங்கே இருக்க வேண்டும் என சொல்ல பாக்யா சரியென சொல்கிறார். எப்படி கடையிலிருந்து வாங்கி வந்து விட்டீர்களா என்று கேட்க ஆமாம் நல்ல கடையா பார்த்து வாங்குவோம் என பாக்கியா சொல்ல அப்படியெல்லாம் நீங்க வெளியில் எதுவும் வாங்கக்கூடாது. எதுவாக இருந்தாலும் நீங்க தான் சமைக்கணும் என சொல்ல பாக்கியா அதிர்ச்சி அடைகிறார். மேலும் ராதிகா இதுதான் நான் உங்களுக்கு கொடுக்கிற டாஸ்க் என சொல்லி அங்கிருந்து நடக்கிறார்.

அதன் பிறகு கிளாசுக்கு வந்த பாக்கியா ராதிகா சொன்னது நினைத்து என்ன செய்வது என வருத்தத்தில் உட்கார்ந்து இருக்க பழனிசாமி விஷயத்தை கேட்க பாக்யா நடந்ததை சொல்ல அவர் கேக் செய்றதெல்லாம் ரொம்ப ஈஸியான விஷயம் ஒன்னு பேக்கிங் கிளாஸ் போங்க, அப்படி இல்லன்னா நான் உங்களுக்கு சொல்லி தரேன் என கூறுகிறார்.

மேலும் எல்லாத்தையும் நீங்களே தான் செஞ்சு வைக்கணும்னு எந்த கேட்டின்லையும் சொல்ல மாட்டாங்க, இங்க மட்டும் எப்படி சொல்றாங்க என கேட்க ராதிகா தன்னுடைய முன்னாள் கணவரின் இன்னாள் மனைவி என பாக்யா உண்மையை உடைக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshimi serial episode update
jothika lakshu

Recent Posts

கருப்பு திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.!!

கருப்பு திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…

4 hours ago

இட்லி கடை: அருண் விஜய் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?வாங்க பார்க்கலாம்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் தனுஷ். இவர் தற்போது நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் மாஸ் காட்டி…

5 hours ago

முத்துவிடம் சிக்கிய சிந்தாமணி, முத்துவின் கேள்வி என்ன? வெளியான சிறகடிக்க ஆசை சீரியல் ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் தற்போது ரோகினி பற்றி…

5 hours ago

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சிவாங்கி.!!

ஸ்டைலிஷ் ட்ரெஸ்ஸில் ஹீரோயின் போல் மாறியுள்ளார் ஷிவாங்கி. தமிழ் சின்னத்திரையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சிவாங்கி. அதனைத்…

10 hours ago

இட்லி கடை : 4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வாங்க பார்க்கலாம்.!!

இட்லி கடை படத்தின் 4 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…

10 hours ago

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று பல்வேறு…

2 days ago