Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பாக்யா மீது கோபத்தில் ஈஸ்வரி. ராதிகாவிடம் சிக்கிய கோபி. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalakshimi serial episode update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் பாக்யா கேன்டின் திறப்பு விழாவிற்கு அவருடன் படிக்கும் பழனிச்சாமி உட்பட சிலர் வருகை தர பாக்யா அவர்களை வரவேற்று உபசரிக்கிறார்.

பிறகு ஈஸ்வரி இதை பார்க்க ஜெனியும் அமிர்தாவும் ஈஸ்வரியை அங்கிருந்து அழைத்துச் செல்ல முயற்சி செய்ய ராமமூர்த்தி அவர்களுடன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து ஈஸ்வரி அங்கு வர இனியா இவங்க எல்லாரும் அம்மாவோட ஸ்போக்கன் இங்கிலிஷ் கிளாஸ்ல கூட படிக்கிறவங்க என சொல்ல பாக்கியா அதிர்ச்சி அடைகிறார்.

பிறகு ஈஸ்வரி கோபமாக இருக்க பழனிச்சாமி என்னங்க சொல்றீங்க இவங்க அவங்கவங்க மாமியாரா ஆனா பாத்தா அப்படி தெரியவே இல்ல உங்களுக்கு அக்கா மாதிரி இருக்காங்க, நல்லா இருக்கீங்களா அக்கா என்ன கேட்டு ஈஸ்வரிக்கு ஐஸ் வைக்க ஈஸ்வரி எல்லாரும் சாப்பிட்டு தான் போகணும் என சொல்லி கோபமாக அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.

அடுத்து பாக்கியா ஈஸ்வரிடம் சென்று அத்த ஒரு நிமிஷம் நான் சொல்றதை கேளுங்க என சொல்ல அது எதுவும் கேட்காமல் செழியனை கூட்டிக்கொண்டு வீட்டுக்கு கிளம்பி விடுகிறார். அதன் பிறகு பாக்யா பழனிச்சாமி உட்பட எல்லோரையும் உட்கார வைத்து சாப்பிட வைக்கிறார். இந்த நேரத்தில் கோபி இனியாவை கூட்டிக் கொண்டு செல்ல கேன்டீனுக்கு வருகிறார்.

அப்படி பழனிச்சாமி பாக்கியாவிடம் மிக ரொம்ப அழகா இருக்கீங்க, உங்களுக்கு வயசு என்ன ஒரு 30 இருக்குமா என கேட்க இதைக் கேட்ட கோபி ஷாக் ஆகிறார். அதோடு பாக்கியா சார் காமெடி பண்ணாதீங்க எனக்கு நாற்பத்தி மூணு வயசு ஆகுது என சொல்ல பொய் சொல்லாதீங்க என பழனிச்சாமி சொல்ல பாக்கியா வெட்கப்பட பாருங்க வெட்கமா என கோபி யாருடா நீ இப்படி வழிஞ்சிட்டு இருக்க என புலம்புகிறார்.

அதன் பிறகு கோபி இனியாவை பார்க்க போக அப்போது ஜெனி சந்தனம் கொடுக்க இனியா ஸ்வீட் கொடுத்து நான் தாத்தாவோட வீட்டுக்கு வரேன் என சொல்லி அனுப்ப கோபி வெளியே வரும்போது ராதிகாவிடம் சிக்கிக் கொள்கிறார். எல்லாரும் சேர்ந்து என்னை வெறுப்பேத்தறீங்களா உங்க முன்னாள் மனைவி கேண்டீன் திறப்பு விழாவுக்கு வந்தீங்களா என கேட்க கோபி இனியாவை கூட்டிச்செல்ல வந்ததாக சொல்கிறார்.

அப்போ இனியா எங்கே என கேள்வி மேல் கேள்வி கேட்டு கோபிக்கு தலையில் ஒரு கொட்டு வைத்து ஸ்வீட் எதுக்கு இன்னும் சாப்பிடாம வச்சிருக்கீங்க என வாயில் திணிக்கிறார். வீட்டுக்கு வாங்க உங்களுக்கு இருக்கு என சொல்லிவிட்டு ராதிகா அங்கிருந்து கிளம்புகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshimi serial episode update
baakiyalakshimi serial episode update