Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அமிர்தவால் ஷாக்கான ஈஸ்வரி. அதிர்ச்சியில் இனியா இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட்

baakiyalakshimi serial episode update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் சென்றிருந்த நிலையில் அங்கு பழனிச்சாமி உள்ளிட்டோரிடம் நண்பராகிறார். பிறகு பாக்கியா தான் செய்து கொண்டு போன ஸ்வீட் கொடுக்க அதை பழனிச்சாமி சூப்பராக இருக்கு என பாராட்டி பாராட்டி மொத்தமாக சாப்பிடுகிறார்.

அதன் பிறகு வீட்டில் ஈஸ்வரி ஃபோனை பார்த்து சிரித்துக்கொண்டிருக்க மதியம் ஒரு மணி ஆனதால் மாத்திரை கொடுக்க வேண்டும் என அமிர்தா ஜெனியை எழுப்ப முயற்சி செய்ய ஜெனி நன்றாக தூங்குகிறார். இதனால் அமர்தா ஈஸ்வரி ரூமுக்கு செல்ல ஈஸ்வரி வழக்கம்போல் கோபப்பட இந்த முறை அமிர்தா பயந்து வெளியே வராமல் இப்போ மாத்திரை போட போறீங்களா இல்லையா என அதட்டுகிறார்.

அப்பவும் ஈஸ்வரி மாத்திரை போட மாட்டேன் என அடம்பிடிக்க அமிர்தா வாயை திறந்து மாத்திரையை போட்டு தண்ணீர் கொடுக்கிறார். பிறகு ரூமில் இருந்து வெளியே வருகிறார்.

பிறகு பாக்கியா ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் முடித்து வெளியே வர அப்போது இனியா சரணுடன் வீட்டுக்கு வர பாக்கியாவிடம் சிக்கிக் கொள்கிறார். ஆனால் பாக்கியம் இனியாவை எதுவும் சொல்லாமல் இனியாவை நலம் விசாரித்து பிறகு சரனிடம் பேசுகிறார். பேர் என்ன ஏது என கேட்க பிறகு நான் தான் இனிய உடன் அம்மா நீ ஒரு நாள் கண்டிப்பா வீட்டுக்கு வரணும் நல்லா சாப்பிடுவியா என்ன கேட்க சரண் எனக்கு பிரியாணினா ரொம்ப பிடிக்கும், நல்லா சாப்பிடுவேன் என சொல்ல அப்போ கண்டிப்பா நீ வீட்டுக்கு சாப்பிட வரணும் என சொல்லி இனியாவை வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார்.

அதன் பிறகு வீட்டில் பாக்கியா, ஜெனி, அமிர்தா, எழில் என எல்லோரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க செழியன் ஜெனியை வந்து படுத்து தூங்க சொல்ல ஜெனி நீ போ நான் வரேன்னு சொல்லி அனுப்புகிறார். பிறகு மீண்டும் செழியன் ரூமில் இருந்து வெளியே வர அமிர்தா மற்றும் எழில் என இருவரும் படிக்கட்டில் அமர்ந்து ரொமான்ஸ் செய்ய ஜெனி வராத காரணத்தினால் இவன் எல்லாம் நல்லா ரொமான்ஸ் பண்ணிக்கிட்டு தான் இருக்கிறான், ஜெனி தான் ஒரு பீலிங்கும் இல்லாம இருக்கா என புலம்புகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshimi serial episode update

baakiyalakshimi serial episode update