Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஜெனியை அடிக்க போன செழியன். கோபிக்கு பாக்யா கொடுத்த பதிலடி. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalakshimi serial episode update

சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஜெனி போனில் அவரது அம்மாவுடன் பேசிக் கொண்டிருக்கும் போது அப்போது வரும் செழியன் நம்ப வீட்டுக்கு வரோம்னு சொல்லு என சொல்ல ஜெனி எதுவும் சொல்லாமல் போனை வைத்து விடுகிறார். போறதா இருந்தால் நம்ப எல்லாரும் எங்க வீட்டுக்கு போகலாம், எங்கம்மா சந்தோஷம்தான் படுவாங்க அப்படி இல்லன்னா எல்லாரும் வாடகை வீட்டில ஒண்ணா இருக்கலாம் புது வீடு வாங்கியதும் எல்லோரும் அங்க போகலாம் என சொல்ல செழியன் ஜெனியை அடிக்க வர பாக்கியா வந்து தடுத்து திட்டி அனுப்புகிறார்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் எழில் வருத்தமாக வெளியே சென்று விடுகிறார். அடுத்து இரவு நேரத்தில் எழில் மொட்டை மாடியில் நின்று யோசனையில் இருக்க அப்போது இனியா போன் செய்து எப்படியாவது வீட்டை வாங்கிட்டேனா அப்பா கைக்கு போகக்கூடாது. எல்லாரும் ஒண்ணா ஒரே வீட்ல சந்தோசமா இருக்கணும் என சொல்கிறார்.

அடுத்து மறுநாள் காலையில் பாக்யா செல்வியுடன் வாக்கிங் செய்து கொண்டிருக்கும் போது அங்கு வரும் கோபி பாக்யாவை நக்கல் அடிக்கிறார். பாக்கியா சொன்ன தேதிக்குள் உங்க கைக்கு பணம் வரும் அப்படி இல்லன்னா வீடு வரும் என சொல்கிறார். என்னமோ உன் பையன் பணத்தை ரெடி பண்ணிட்டு வா என்று ஹீரோ மாதிரி பேசினாலே இப்ப என்ன காமெடி பீஸ் ஆகிட்டானா என சொல்ல இதனால் கடுப்பாகும் பாக்கியா அவன் எனக்கு மட்டும் புள்ள இல்ல உங்களுக்கும் புள்ள தான். அவனை அசிங்கப்படுத்தறா நினைச்சு உங்க மரியாதையை நீங்களே கெடுத்துக்காதீங்க என பதிலடி கொடுக்க கோபிக்கு பிபி ஏறுகிறது.

அடுத்து வீட்டுக்கு வந்ததும் பாக்கியா செல்வியிடம் ஆபீஸ் பக்கத்துல ரெண்டு பெட் ரூம் இருக்க மாதிரி ஒரு வீடு பாரு என சொல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshimi serial episode update
baakiyalakshimi serial episode update