Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கோபியை கிண்டல் அடித்த நண்பர் சதீஷ். மகிழ்ச்சியில் பாக்கியா. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalakshimi serial episode update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் இனியா தாத்தாவுடன் டியூஷனுக்கு பாக்க அப்போது பாக்கியா வெளியே காத்துக் கொண்டிருக்க தாத்தா அம்மாவுக்கு டியூஷன் போற விஷயம் தெரியுமா ஒரு முறை சொல்லிடலாம் என சொல்ல தாத்தா நாங்க டியூஷனுக்கு போறோம் என சத்தம் போட பாக்யா அதைக் கேட்டு சந்தோஷப்படுகிறார்.

அதன் பிறகு கோபி தன்னுடைய நண்பர் சதீஷை பார்த்து ராதிகா குடும்ப செலவுக்கு மட்டுமே 50,000 பணம் கேட்ட விஷயத்தை சொல்லி இந்த பிசினஸை வச்சுக்கிட்டு மட்டும் ஃபேமிலிய சமாளிக்க முடியுமான்னு தெரியல என புலம்ப உனக்கு இதெல்லாம் தேவைதான் என அவர் நக்கல் அடிக்கிறார்.

அதற்கு அடுத்ததாக ஜெனியின் அம்மா வீட்டுக்கு வர பிறகு சென்னைக்கு பூ முடிக்க தேவையான பொருட்களை செழியன் வாங்கி வர அப்போது கோபி பார்த்துவிட்டு பேச செழியன் பங்க்ஷன் என்று மட்டும் சொல்கிறான் ஆனால் ஜெனிக்கு பங்க்ஷன் என்பதை சொல்லாமல் விடுகிறான்.

அடுத்ததாக பாக்யா கிச்சனில் இருக்க அப்போது அங்கு வரும் எழில் நீ ரொம்ப கஷ்டப்படுறமா நான் கண்டிப்பா படம் பண்ணி இந்த கஷ்டத்தை எல்லாத்தையும் சரி பண்றேன். அப்படி படம் பண்ண முடியலன்னாலும் வேலைக்கு போய் எல்லாத்தையும் சரி பண்றேன் என்ன சொல்ல பாக்கியா போய் ஒழுங்கா முதல்ல சொன்னா மாதிரி இந்த படத்தை பண்ற வேலைய பாரு என திட்டுகிறார். குடும்பத்தை பத்தி எல்லாம் நீ நினைக்காத அதை நான் பார்த்துக்கிறேன் என அறிவுரை கூறுகிறார்.

உனக்கு இப்ப என்ன வேலை செய்யணும் அதானே மேல துணி காய போட்டு இருக்கேன் அதை எடுக்க மறந்துட்டேன் போய் எடுத்துட்டு வா என சொல்ல எழில் அந்த வேலையை செய்ய செல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshimi serial episode update
baakiyalakshimi serial episode update