ஜெனி முடிவு ஒன்றை எடுக்க, செழியனுக்கு பேரதிர்ச்சி ஒன்றை சொல்லி உள்ளனர்.
தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஜெனி அம்மா ஜெனியை கொஞ்ச நாள் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன் இங்க நிலைமை சரியானதுக்கப்புறம் நான் கூட்டிட்டு வரேன் என்று சொல்ல பாக்யாவும் சரி என சம்மதிக்கிறார் உடனே ஜெனி நான் வரமாட்டேன் நான் எதுக்கு வரனும் இங்க எல்லாரும் இவ்ளோ கஷ்டத்துல இருக்கும்போது நான் மட்டும் எப்படி வர முடியும் என்று பிடிவாதம் பிடிக்க பாக்யா ஒரு கட்டத்திற்கு மேல் ஜெனியே சமாதானப்படுத்தி அனுப்பி வைக்கிறார்.
மேலே துணி எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருக்க ஜெனி அம்மாவிடம் நீ எதுக்குமா இப்ப என்ன கூட்டிட்டு போகணும்னு இவ்ளோ தூரம் பேசிகிட்டு இருக்க என்று கேட்க ஏற்கனவே உங்க அப்பா கோவமா இருக்காரு இந்த டென்ஷன்ல நீங்க எப்படி மெலிந்து போயிருக்க கொஞ்ச நாள் இருந்துட்டு வா என்று உங்க மாமியார் தான் சொன்னாங்க என்று சொல்ல கீழே வந்துச்சு நீ இவ்ளோ பிரச்சனை இல்ல நானும் ஒரு பிரச்சனையா நினைக்கிறீங்களா ஆன்ட்டி அதனால தான் நீங்க எனக்கு போக சொல்றீங்களா என்று கேட்க அதெல்லாம் ஒன்னும் இல்ல ஜெனி இங்கே ஏகப்பட்ட பிரச்சனை இருக்கு நீயாவது கொஞ்சம் நிம்மதியா இருப்பன்னு தான் அப்படி செஞ்ச என்று சொல்ல நீங்க இப்படி இருக்கும்போது நான் மட்டும் எப்படி அங்க நிம்மதியா இருக்க முடியும் என்று கேட்கிறார்.
அப்போ நீங்க யாருமே என்ன இந்த வீட்ல ஒருத்தியா பாக்கல, இது இனியாவ நீ இங்க பிரச்சனை தீர வரைக்கும் ஹாஸ்டலுக்கு போ சொல்லுவீங்களா இல்ல செழியன ஹோட்டல்ல தங்க சொல்லுவீங்களா என்ன மட்டும் ஏன் அம்மா வீட்டுக்கு போக சொல்றீங்க நான் என்ன வெக்கேஷன்காக வந்திருக்க சந்தோஷமா இருக்க ஒரு இடமும் சோகமா இருக்க உங்க இடமும் போறதுக்கு என்றெல்லாம் பேசுகிறார். நான் செழியன் பிரச்சனைல இருந்தப்போ ஆன்ட்டி எத்தனை வாட்டி வந்து நீ உள்ள விடாதபோதும் எனக்காக வந்து இருக்காங்க இன்னைக்கு அவங்க ஒரு பிரச்சனைல இருக்கும்போது நான் எப்படி விட்டுட்டு வர முடியும் என்னால் வர முடியாது என்று உறுதியாக சொல்ல ஈஸ்வரி மற்றும் பாக்யா இருவரும் கண்கலங்குகின்றனர் உடனே பாக்கியா நீ போக வேண்டாமா என்று சொல்லிவிடுகிறார். உடனே அம்மாவிடம் இவ இவ்வளவு சொல்லியும் நாங்க எப்படி அனுப்புறது சரி விடுங்க நாங்க பார்த்துக்கிறோம் என்று சொல்ல உன்னோட ஹெல்த் தான் முக்கியம் ஜெனி பத்திரமா இரு என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.
பிறகு செல்வியும் பாக்யாவும் ரெஸ்டாரன்டை வந்து பார்க்க சீல் வைத்திருப்பதை பார்த்து பாக்கியா கண்கலங்குகிறார் இதுக்கு தான் வரவேண்டான்னு சொன்ன என்று சொல்ல ஒரு பேரை சம்பாதிக்கிறது ரொம்ப கஷ்டம் ஆனால் அந்த காசுக்காக நம்ம தப்பு பண்ணிட்டோம்னு சொல்லும் போது அது சரி சரி பண்றது இன்னும் கஷ்டம் என்று கலங்கி நிற்கிறார். உடனே அந்த நேரம் பார்த்து எழில் வரை நீ இங்கே எங்கடா என்று கேட்க இல்லம்மா வீட்டுக்கு தான் போனேன் நீ வெளியே போய் இருக்கிறதா சொன்னாங்க கண்டிப்பா இங்கேதான் இருப்பேன்னு சொல்லி வந்தேன் என்று சொல்லுகிறார். மீண்டும் கடையை பத்தி பேசிக் கொண்டிருக்க உன் கைப்பக்குவத்துக்கு எல்லாம் சரியாயிடுமா என்று எழில் சொல்ல பாக்யாவிற்கு ஒரு போன் வருகிறது அதனால் அவர் போன் பேச சென்று விடுகிறார்.
செல்வியிடம் அம்மா எப்படி இருக்காங்க கா என்று கேட்காதே என் தம்பி கேக்குறீங்க பித்து புடிச்ச மாதிரி உட்கார்ந்துகிட்டு இருக்காங்க காசு ரெடி பண்றதுக்காக கணக்கு பார்த்துட்டு இருக்காங்க என்று சொல்ல எவ்வளவுக்கா தேவைப்படுது என்று எழில் கேட்க 11 லட்சம் என்று செல்வி சொல்லுகிறார். இதைப் பேசிக் கொண்டிருக்கும்போது பாக்கியா அங்கு வந்துவிட இதெல்லாம் எதுக்கு அவன் கிட்ட சொல்லிட்டு இருக்க என்று கோபப்பட அது இருக்கட்டும் மா இப்போ நீ எப்படி ரெடி பண்ணுவ என்று கேட்க ஏதாவது பண்ற என்று பேசிக் கொண்டிருக்கின்றனர் அந்த நேரம் பார்த்து பழனிச்சாமி வர உங்க கடையை நான் பத்திரமா பார்த்துக்கிறேன் என்று சொல்லி பேசுகிறார். பிறகு நான் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க காசு ரெடி பண்ணிட்டீங்களா என்று கேட்க பாக்யா இல்லை என்று சொல்லுகிறார் ரெடி பண்ணிடுவோம் என்று சொல்ல, என்கிட்ட வேணாம் கொஞ்சம் காசு இருக்கு நான் தரேன் அப்படின்னு பழனிச்சாமி சொல்ல பாக்கியா வாங்க மறுக்கிறார். என்னால ரெடி பண்ண முடியலன்னா கண்டிப்பா உங்க கிட்ட தான் சார் உதவி கேட்பேன். என்று சொல்ல ஒரு ஒருவாட்டி இப்படித்தான் சொல்றீங்க ஆனா எப்பயும் கேட்டதில்லை சரி வாங்க நின்னுட்டு இருக்கீங்க நம்ம கபேயில் ஒரு காபி குடிக்கலாம் என்று மூவரையும் அழைத்து செல்கிறார்.
பிறகு செழியன் ஆபீஸில் அவரை கூப்பிட்டு பேச அதிர்ச்சி அடைகிறார்?என்ன நடந்தது என்று எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
