ராதிகாவிடம் திட்டு வாங்கிய கோபி. சந்தோஷப்படும் பாக்கியா. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் செழியன் அடிக்க கை ஓங்கியதை நினைத்து கோபி அதிர்ச்சியாக இருக்க ராதிகா என்னாச்சு என கேட்க செழியன் என்னை அடிக்க கை ஓங்குவானு நான் கொஞ்சம் கூட நினைக்கவே இல்ல, டாடி டாடி என்று என் மேல உயிரா இருப்பான் அவன் இப்படி பண்ணது எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு என புலம்புகிறார்.

ராதிகா நான் இங்க வந்து ஒரு வாரம் தான் ஆகுது அதுக்குள்ளவே இங்கு யார் எப்படி என்பதை நல்லா புரிஞ்சுகிட்டேன் ஆனா நீங்க இன்னுமா புரிஞ்சுக்கல என சொல்கிறார். மேலும் கோபி திரும்பத் திரும்ப பாக்கியா எப்படி அவன் கூட பேசலாம் என்பதை பற்றிய பேச ராதிகா கடுப்பாகிறார். நீங்க எதுக்காக கீழ போனீங்க என கேட்க உனக்காகத்தான் எவ்வளவு தைரியமா பேசினேன் என கோபி பதில் சொல்ல எனக்காக என்ன பேசினீங்க? எல்லாம் அந்த பாக்கியவ பத்தி தானே பேசினீங்க.

இந்த வீட்ல இருக்கவங்க எல்லாரும் பாக்கியா ரசிகர் மன்றத்துல இருக்காங்கன்னா நீங்கதான் பாக்கியா ரசிகர் மன்றத்தோட தலைவர் மாதிரி இருக்கீங்க, அவங்க யார்கிட்ட பேசினா உங்களுக்கு என்ன உங்களுக்கு ஏன் பொசசிவ்னஸ் வருது என கேள்வி கேட்டு கோபிக்கு அதிர்ச்சி கொடுக்கிறார் ராதிகா. மேலும் நீங்க என்ன பண்ணுவீங்கன்னு எனக்கு தெரியாது உங்க அப்பா அம்மா வீட்ல இருக்க எல்லோரும் எனக்கு மரியாதை கொடுத்து நடத்தணும் என சொல்கிறார்.

அதன் பிறகு ராமமூர்த்தி ஈஸ்வரி உள்ளிட்டோர் பாக்யாவை சமாதானம் செய்து கொண்டிருக்க எழில் அவர் நீ சந்தோஷமா இருக்கிறது பார்த்து வயிறு எரிகிறாரு. அதனாலதான் அதைக் கெடுக்க என்ன பண்ணலாம்னு யோசிக்கிறாரு என சொல்ல பாக்கியா செழியினை பார்க்க செழியன் என்னம்மா அப்படி பார்க்கிற என கேட்க உனக்கு அம்மாவ பத்தி யார்னா சொன்னா கோவம் வருமா என கேட்கிறார். பின்ன வராதா? உனக்கும் அப்பாவுக்கும் சண்டைனா கூட நான் நடுவுல வரமாட்டேன் ஆனா அவர் இப்படி பேசினது ரொம்ப தப்பு என சொல்ல பாக்கியா சந்தோசப்படுகிறார்.

நீ இத பத்தி எல்லாம் கவலைப்படாத உனக்கு பிடிச்சது செய் என்று எழில் மற்றும் செழியன் சொல்ல நான் எதுக்கு கவலைப்படணும் எனக்காக நீங்க எல்லாரும் இருக்கும்போது நான் இத பத்தி எல்லாம் யோசிக்கக்கூட மாட்டேன் என சொல்கிறார். அதன் பிறகு செழியன் ரூமுக்கு வர ஜெனியும் அவன் நடந்து கொண்ட விதத்தைப் பற்றி பாராட்டி முத்தம் கொடுக்கிறார்.

அதன் பிறகு செழியனுக்கு அந்த கிளைன்ட் லேடி தொடர்ந்து போன் செய்ய முதலில் எடுக்காமல் இருக்கும் செழியன் பிறகு ஜெனி சொன்னதால் போனை எடுத்துப் பேச அவர் ப்ராஜெக்ட் சம்பந்தமாக பேசாமல் செழியனிடம் வழிந்து வழிந்து பேசுகிறார்.

பிறகு செல்வி கிச்சனில் எழிலிடம் எனக்கு ஒரு கதை தோணுச்சு என தன்னுடைய கதையை அப்படியே எடுத்து சொல்லிக் கொண்டிருக்க அந்த சமயம் அங்கு வரும் வரும் ராதிகா பாக்கியாவை பார்த்து நேத்து இப்படி எல்லாம் நடக்கும்னு நீங்க எதிர்பார்க்கவே இல்ல என கேட்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshimi serial episode
jothika lakshu

Recent Posts

1000 ஆண்டுகளுக்கு முந்தைய (கி.பி. 10-ஆம் நூற்றாண்டு) நிகழ்ந்த வரலாற்றுக் கதை ‘சுயம்பு’ வெளியீடு

1000 ஆண்டுகளுக்கு முந்தைய (கி.பி. 10-ஆம் நூற்றாண்டு) நிகழ்ந்த வரலாற்றுக் கதை 'சுயம்பு' வெளியீடு வரலாற்றுக் கதையோ ஆன்மீகக் கதையோ…

42 seconds ago

தலைவர் 173 படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மூன்று நாயகிகள்?

தலைவர் 173 படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மூன்று நாயகிகள்? ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கும் 'தலைவர்-173' படத்தை 'டான்' பட…

6 minutes ago

சினிமா வாழ்க்கை நிரந்தரமில்லை – மனம் திறந்த ராஷி கன்னா

சினிமா வாழ்க்கை நிரந்தரமில்லை - மனம் திறந்த ராஷி கன்னா தமிழ் சினிமாவில் இமைக்கா நொடிகள், அடங்​கமறு, திருச்சிற்றம்​பலம், அரண்​மனை…

11 minutes ago

விரைவில் தொடங்க இருக்கும் விஜய் டிவியின் பிரபல நடன நிகழ்ச்சி..!

விரைவில் தொடங்க இருக்கும் விஜய் டிவியின் பிரபல நடன நிகழ்ச்சி..! விஜய் டிவியின் பிரபல நடன நிகழ்ச்சி தற்போது ஒளிபரப்பாக…

14 minutes ago

பார்வதி சொன்ன வார்த்தை, எதிரெதிராய் நிற்கும் மகேஷ் சூர்யா, வெளியான மூன்று முடிச்சு,சிங்க பெண்ணே ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…

31 minutes ago

சிந்தாமணியின் வலையில் சிக்கிய விஜயா, முத்து சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஸ்ருதி கோபமாக…

43 minutes ago