baakiyalakshimi serial epiosde update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்கியா மற்றும் அவரது தோழியும் இருக்க இரண்டு மூன்று நாட்களாக பழனிச்சாமி வராத காரணத்தினால் என்ன ஆச்சு என்று தெரியாமல் குழம்பி போய் அவருக்கு போன் செய்து விசாரிக்கின்றனர்.
அப்போது பழனிச்சாமி அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்ற காரணத்தினால் வரவில்லை என சொல்ல பாக்கியா மற்றும் அவரது தோழி என இருவரும் பழனிச்சாமி வீட்டிற்கு செல்ல முடிவெடுத்து அவரிடம் அட்ரஸ் கேட்டு செல்கின்றனர்.
வீட்டுக்கு வந்த இருவரையும் அன்போடு உபசரிக்கும் பழனிச்சாமி அதன் பிறகு அவரது அம்மாவிடம் அழைத்துச் செல்ல அவர் பழனிச்சாமிக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை என வருத்தப்பட பாக்யா கண்டிப்பா கூடிய சீக்கிரம் நடக்கும் நீங்க திரும்ப எழுந்து நடப்பீங்க என தன்னம்பிக்கை கொடுக்கிறார்.
அதற்கு அடுத்ததாக பழனிச்சாமி இருவரையும் உட்காரவை சாப்பாடு பரிமாறி சாப்பிட வைக்கும் போது பாக்கியா அம்மாவோட பிறந்தநாளுக்கு உங்க சொந்தக்காரங்க எல்லாரையும் கூப்பிடுங்க உங்களுக்காக எவ்வளவு பேர் இருக்காங்க என்பது தெரிந்தாலே அவங்க பாதி குணமாகிடுவாங்க என ஐடியா கொடுக்க இது ரொம்ப நல்ல விஷயம் கண்டிப்பா அப்படியே செய்கிறேன் என பழனிச்சாமி கூறுகிறார்.
அதன் பிறகு இருவரும் வீட்டுக்கு கிளம்ப பாக்யாவின் தோழி பேக்கை உள்ளயே வச்சிட்டேன் என அதை எடுத்துட்டு வர உள்ளே வருகிறார். பிறகு பாக்யா மற்றும் பழனிச்சாமி என இருவரும் சிரித்து பேசிக்கொண்டிருக்க அப்போது அந்த வழியாக கோபி வருகிறார்.
இருவரும் சிரித்து சிரித்து பேசி பழகிக் கொண்டிருப்பதை பார்த்த கோபி அதிர்ச்சி அடைகிறார். எல்லாரும் கோபி தப்பு பண்றாங்க ஆனா பாக்கியா பண்ற தப்பு எதுவும் வெளியே தெரிய மாட்டேங்குது என புலம்புகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று பல்வேறு…
வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தமன்னா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர்…
இட்லி கடை படத்தின் 2 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
காந்தாரா படத்தின் கதை நிகழ்காலத்தில் நடந்த நிலையில், அதற்கு முந்தைய காலகட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளை கூறும் கதை தான் காந்தாரா…
நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் காந்தாரா.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…