Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பாக்கியாவால் கடுப்பான ராதிகா. கோபிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalakshimi serial epiosde update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி ராஜசேகர் கோடீஸ்வரன் என எல்லோரும் அடுத்தடுத்து விளக்கேற்ற ராதிகா இதை பார்த்து அப்செட் ஆகிறார்.

அதன் பிறகு பாக்யா ராதிகாவை சந்தித்து பங்க்ஷனுக்கு வந்ததுக்காக நன்றி சொல்லி நான் இந்த அளவுக்கு வளர்ந்ததுக்கு முக்கிய காரணம் நீங்க தான் என சொல்கிறார். ஆரம்பிக்கும் தனக்கும் மிஷின் வாங்க பணம் கொடுத்த விஷயத்தை சொல்லி நன்றி சொல்கிறார். நீங்க நடிக்கிறீங்களா என கேட்க நான் எதுக்கு நடிக்கணும் உண்மையைத்தான் சொல்கிறேன் நான் என்னைக்கும் நன்றி மறக்க மாட்டேன் என பேசுகிறார்.

அதன் பிறகு கோபி தன்னுடைய நண்பன் செந்தில் சந்தித்து இனியா பங்ஷனுக்கு போயிருக்கும் விஷயத்தை சொல்கிறார். திரும்பவும் அவ என்கிட்ட வருவாளா இல்லையான்னு தெரியல என் போனை கூட எடுக்க மாட்ற என புலம்பி தவிக்கிறார். ஒருக்கட்டத்தில் இனியா போனை எடுக்க கோபி நான் வந்து உன்னை கூட்டிக்கிறேன் என சொல்ல இனிய நான் இவங்களோட வீட்டுக்கு போயிட்டு அப்புறமா வரேன்னு சொல்லி ஃபோனை வைத்து விடுகிறார்.

அடுத்து ராதிகாவை கூப்பிட்டு உட்கார வைத்து பாக்கியா சாப்பிட சொல்ல தனது பாஸ் கோடீஸ்வரன் சொன்னதால் மறுக்க முடியாமல் ராதிகா சாப்பிடுகிறார். அப்போது பாக்கியா குடும்பத்துடன் சந்தோஷமாக பேசி பழக அதை பார்த்து கடுப்பாகி எழுந்து சென்றுவிட பாக்யா இதை பார்த்து ராதிகாவுக்கு இங்கிலீஷில் பதிலடி கொடுக்க தனது குடும்பத்திடம் எப்படி பேச வேண்டும் என்ன பேச வேண்டும் என கற்றுக் கொள்கிறார்.

பிறகு ராதிகாவை சந்தித்து போஸ் கொடுத்து இந்த பங்க்ஷனுக்கு வந்ததுக்காக நன்றி இன்றிலிருந்து நல்ல டேஸ்டியான ஃபுட் உங்களுக்கு கிடைக்கும் என இங்கிலீஷில் சொல்லி வியக்க வைக்கிறார். அதோடு இங்கிலீஷ் ஒரு லாங்குவேஜ் தான். அது இல்லாம என்னால பிசினஸ் பண்ண முடியும், ஆனா எப்போ ஒருத்தர் நமக்கு தெரியாத விஷயத்தை வைத்து நம்மள அடிக்க முயற்சி பண்றாங்களா அப்பா உங்களுக்கு அதுக்கான வாய்ப்பை கொடுக்கக்கூடாது நான் இங்கிலீஷ் கத்துக்கறேன் என சொல்கிறார்.

பிறகு ராதிகா அந்த ரோஜா பூவை வாங்கி குப்பைத் தொட்டியில் போட்டு விட பாக்யா வருந்துகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshimi serial epiosde update

baakiyalakshimi serial epiosde update