தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறிமுகம் ஆகி பிரபலமானவர் ஷபானா. செம்பருத்தி சீரியல் முடிவுக்கு வந்த பிறகு சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மிஸ்டர் மனைவி சீரியலில் நாயகியாக அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அந்த சீரியலில் இருந்து இவர் வெளியேறிய நிலையில் விரைவில் புதிய ப்ராஜெக்ட் உங்களை சந்திப்பேன் என தெரிவித்து இருந்தார்.
பாக்கியலட்சுமி சீரியலில் செழியனாக நடித்து பிரபலமாகி தற்போதைய ஜீ தமிழில் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் ஹீரோவாக நடித்து வரும் ஆரியனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தற்போது ஆர்யன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மூன்று வருடத்திற்கு முன்னர் இருவரும் காதலித்து வந்த போது ரகசியமாக சந்தித்துக் கொண்ட வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இதைப் பார்த்த ஷபானா உடனே அந்த வீடியோவை டெலிட் செய்யுமாறு கமெண்ட் செய்துள்ளார்.
இதோ அந்த வீடியோ
View this post on Instagram