Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கோபியை பார்த்து அதிர்ச்சியான எழில்.. கோபிக்கு காத்திருக்கும் ஷாக். இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalakshimi and pandian stores serial episode update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி என இரண்டு சீரியல்களும் இணைந்து மெகா சங்கமம் என்ற பெயரில் ஒரு மணி நேரம் எபிசோடாக இணைந்து ஒளிபரப்பாகி வருகிறது.

இன்றைய எபிசோடில் கோபி பிரேக் பாஸ்ட்க்கு போகலாம் என சொல்ல ராதிகா தயாராகி இருக்க அந்த நேரத்தில் மோகன் போன் செய்து சாப்பிட வாடா பசிக்குது என சொல்ல கோபி வெளியே சொல்லாமல் ரூமுக்குள்ளேயே சாப்பிட்டு விடலாம் என ராதிகாவிடம் பேச அவள் கண்டிப்பா வெளியே தான் போய் சாப்பிடணும் என சொல்லிவிட வேறு வழியில்லாமல் இருவரும் கிளம்பி செல்கின்றனர்.

இந்த பக்கம் மூர்த்தி தனத்திடம் தனியாக அமர்ந்து பேசிக்கொண்டிருக்க அப்போது கண்ணன் ஐஸ்வர்யா வந்து டிஸ்டர்ப் செய்கின்றனர். பிறகு எல்லோரும் வீட்டுக்கு சாப்பிட போகலாம் என கண்ணன் கேட்க பிறகு அனைவரும் கிளம்பி செல்கின்றனர். இந்த பக்கம் பாக்கியலட்சுமி குடும்பத்தாரும் சாப்பிட வருகின்றனர்.

இருவரும் வெவ்வேறு ரூமில் இருக்க மூர்த்தியின் பேச்சு குரல் கேட்டு எழில் வெளியே எழுந்து வந்து பார்க்க இவர்களை பார்த்ததும் சந்தோஷப்பட்டு எல்லோரையும் அழைத்து வர பிறகு எல்லோரும் நலம் விசாரித்துக் கொண்டு ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகின்றனர். இந்த நேரத்தில் ராதிகா மற்றும் கோபி சாப்பிட ஹோட்டலுக்கு வர எழிலுக்கு போன் வந்து வர அவர் வெளியே சென்று பேசிக் கொண்டிருக்கிறார்.

இந்த நேரத்தில் கோபிக்கு அவருடைய நண்பன் மோகன் போன் போட்டு பேச கோபி அவரை சமாளித்துக் கொண்டிருக்கிறேன் இந்த நேரத்தில் வெளியே வர இருவரும் மோதிக்கொள்ள கோபி எழிலை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். என்ன நிம்மதியாக இருக்க விட மாட்டீங்களா என திட்டுகிறார். பிறகு கோபி ராதிகாவை அழைத்துக் கொண்டு ஹோட்டலுக்கு சென்று விட உங்களுக்கு ஹனிமூன் பேக்கேஜ் பிரேக் பாஸ்ட் வெளியே என சர்வர் கூறுகிறார். இருவரும் வெளியே வந்து சாப்பிடும் போது கோபி எழிலை நினைத்து டென்ஷனாக இருக்கிறார். இதனால் ராதிகாவுக்கு சந்தேகம் வந்து என்னை ஏது என கேட்க ஒரு கட்டத்தில் கோபி சத்தம் போட்டு விடுகிறார். பிறகு ராதிகாவிடம் மன்னிப்பு கேட்டு ஒரு வழியாக சமாதானம் செய்கிறார்.

அடுத்து எழில் இந்த விஷயத்தை வீட்டில் சொல்லாமல் மறைத்து விட்டு எல்லோரும் ஒன்றாக சாப்பிட்டுவிட்டு ரூமுக்கு கிளம்பி செல்கின்றனர். வெளியில் ஒன்றாக போகலாம் என முடிவெடுக்கின்றனர். ‌ பெண்கள் எல்லோரும் ரூமுக்கு சென்றிருக்க எழில், மூர்த்தி, கண்ணன் லிட்டர் வெளியில் நின்று கொண்டிருக்க அப்போது கோபி ராதிகாவுடன் வருகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மெகா சங்கமம் எபிசோட் முடிவடைகிறது.

அதன் பிறகு வெளியான ப்ரோமோ வீடியோவில் கண்ணன் கோபியை பார்த்துவிட்டு எங்க அக்காவுக்கு துரோகம் பண்றீங்களா இதோ வரேன் என சொல்லி மூர்த்தியிடம் சென்று விஷயத்தை சொல்லி அவரை கூட்டி வருகிறார்.

 baakiyalakshimi and pandian stores serial episode update

baakiyalakshimi and pandian stores serial episode update