Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சன் டிவி சீரியல் நடிகை ஆல்யா மானசா மகள்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியலில் ஜோடி சேர்த்து நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர்கள் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா.

இந்த சீரியலை தொடர்ந்து இவர்கள் இருவரும் நிஜ வாழ்க்கையில் திருமணம் செய்து கொண்டு தற்போது இரண்டு குழந்தைகளுக்கு அப்பா அம்மாவாகியுள்ளனர்.

விஜய் டிவி சீரியலை தொடர்ந்து சஞ்சீவ் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் நாயகனாக நடிக்க ஆலியா மானசா அதே சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ஆலியா மானசாவின் மூத்த மகள் ஐலா சஞ்சீவி உடன் சேர்ந்து கயல் சீரியலில் நடித்துள்ளார். சஞ்சீவ் கயலுடன் திருமணமாகி குழந்தையுடன் வாழ்வது போல கனவு காண அதில் அவர்களின் குழந்தையாக ஐலா நடித்துள்ளார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

aylaa sanjeev in kayal serial update
aylaa sanjeev in kayal serial update