ayalaan-movie-release-update
கோலிவுட் திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் டாக்டர், டான், பிரின்ஸ் திரைப்படங்களின் வரவேற்பை தொடர்ந்து அடுத்ததாக மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மாவீரன் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
இது தொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்பை படக்குழு சமீபத்தில் தெரிவித்ததை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏற்கனவே தயாராகி இருந்த அயலான் திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.
அதாவது, ஆர். ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் அயலான். ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் ஏலியனை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் இப்படத்தில் 4500-க்கும் அதிகமான விஎஃப்எக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும் படம் முழுவதும் ஏலியன் கதாப்பாத்திரம் இடம் பெற்றுள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. இதனால் படத்தின் வேலையில் முடிய தாமதமானதால் இப்படம் தொடர்பான அப்டேட் எதுவும் இதுவரை வெளிவராமல் இருந்து வந்த நிலையில் நேற்றைய தினம் இப்படம் தொடர்பான அப்டேட் இன்று வெளியாக இருப்பதாக படக்குழு தெரிவித்திருந்தது.
அதன்படி, அயலான் திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமான தகவலை அறிவித்துள்ளது. இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் இந்த தகவலை இணையதளங்களில் ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர்.
Kadhal Reset Repeat - Official Teaser , Director Vijay ,Harris Jayaraj ,Madumkesh , Jiya Shankar…
தமிழ் சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் பாலா அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து ரஜினி முருகன் தொடரி,பைரவா அண்ணாத்த…
பைனான்சியரிடம் சென்று விஜயா பணத்தை வாங்கியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.…