Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அயலான் படத்திற்கு “யு”சான்றிதழ்.. படக்குழு அறிவிப்பு

ayalaan-movie latest update

ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘அயலான்’. ஏ.ஆர் ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.சிவகார்த்திகேயன் நடித்து வெளியான படங்களிலேயே அதிகப்படியான நாடுகள் மற்றும் திரைகளில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘அயலான்’ தான் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. ‘

அயலான்’ திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்கில் வெளியாகவுள்ளது.அயலான் போஸ்டர்இந்நிலையில், ‘அயலான்’ படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு தணிக்கை குழு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த படம் குடும்பங்கள் பார்க்கும் வகையில் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.