Categories: Health

காய்ச்சல் நேரத்தில் தவிர்க்கவேண்டிய விஷயங்கள் என்ன?

காய்ச்சல் இருக்கும்போது, பசிக்காமல் சாப்பிடுவது மிகமோசமான விளைவுகளை உருவாக்கும். மேலும் தாகம் இல்லாமல் தண்ணீர் பருகுவதும் நல்லதல்ல. எக்காரணம் கொண்டும் உடலின் தேவையைப் புரிந்துகொள்ளாமல் உணவை நாடாதீர்கள்.

காய்ச்சல்காரர் முழுமையாக ஓய்வெடுக்க வேண்டும். தாகம் எடுத்தால், வெந்நீரை ஆறவைத்தோ, வெதுவெதுப்பாகவோ பருக வேண்டும். தாகம் இல்லாமல் ஒரு சொட்டு நீர் கூட பருக வேண்டாம்.

காய்ச்சல் துவக்கநிலையில் இருக்கையில், பசிக்கும்போது, அரிசிக் கஞ்சி, இட்லி, இடியாப்பம் ஆகியவற்றை உட்கொள்ளலாம். இட்லி இடியாப்பத்திற்கு சர்க்கரை தொட்டுக் கொண்டால் நல்லது. குழம்பு, சட்னிகளைத் தவிர்க்க வேண்டும்.

காய்ச்சல் உயர்ந்து பின்னர் இறங்கும். அந்த நிலையில் பசிக்கும்போது, இரசம் ஊற்றி சோற்றை நன்கு கரைத்து உட்கொள்ளலாம். இரசத்தில் புளிக்குப் பதில் தக்காளி சேர்ப்பது நல்லது. இதற்கு பருப்புத் துவையல், புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி துவையல் வகைகள் தொட்டுக்கொள்ளலாம்.

காய்ச்சலின் அளவு மிகவும் அதிகமானால், குளிர்ந்த நீரில் துணியை நனைத்து நெற்றியில் ஒத்தடம் தரவேண்டும். உடல் குளிரும் அளவுக்கு ஒத்தடம் தரக் கூடாது. அதிக வெப்பம் குறையும் அளவு தந்தால் போதும்.

மேற்கண்ட உணவுகள் தவிர வேறு எந்தவகை உணவையும் பானத்தையும் தவிர்ப்பது சிறந்தது. குறிப்பாக, பால் பொருட்களை நிறுத்திவிடுவது மிகமுக்கியம்.

நிலவேம்பு போன்ற கசாயங்களைப் பருகும் வழக்கம் இப்போது அதிகரித்துள்ளது. முறையான மருத்துவ ஆலோசனை இல்லாமல் நிலவேம்பு போன்ற மருந்துகளைப் பருகுவது நல்லதல்ல.

admin

Recent Posts

உருப்படியான வேலையை பாருங்கள்: பிரகாஷ்ராஜ் கோபம்; காரணம்.

உருப்படியான வேலையை பாருங்கள்: பிரகாஷ்ராஜ் கோபம்; காரணம். சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து…

49 seconds ago

ஆவேசம் 2 அப்டேட் கொடுத்த பகத் பாசில்

ஆவேசம் 2 அப்டேட் கொடுத்த பகத் பாசில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு படம், அடுத்த பாகமாக தொடர்வது வழக்கம் அவ்வகையில்…

7 minutes ago

அற்புதமான ரொமான்டிக் காமெடி: வித் லவ் படத்தை பாராட்டிய பகவந்த் கேசரி இயக்குநர் அனில் ரவிபுடி

அற்புதமான ரொமான்டிக் காமெடி: வித் லவ் படத்தை பாராட்டிய பகவந்த் கேசரி இயக்குநர் அனில் ரவிபுடி புதுமுகம் மதன் இயக்கத்தில்…

11 minutes ago

Pookie – Official Trailer

Pookie - Official Trailer , Vijay Antony , Ajay Dhishan, R K Dhanusha , Ganesh…

1 hour ago

விஜய் தேவர் கொண்டா,ராஷ்மிமா திருமணம்? வெளியான லேட்டஸ்ட் தகவல் இதோ.!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வருபவர் விஜய் தேவர கொண்டா. அதேபோல் தெலுங்கு தமிழ் என இரண்டிலும் முன்னணி…

4 hours ago

சுந்தரவல்லி சொன்ன வார்த்தை, சூர்யா கொடுத்த பதிலடி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

4 hours ago