Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அதர்வா நடிக்கும் புதிய படத்தின் டைட்டிலை வெளியிட்ட படக்குழு.. வைரலாகும் தகவல்

atharvaa-movie title update

கடந்த 2016-ஆம் ஆண்டு தினேஷ், மியா ஜார்ஜ், நிவேதா பெத்துராஜ் நடிப்பில் வெளியான ‘ஒரு நாள் கூத்து’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் வெங்கடேசன். அதன் பின்னர் ‘மான்ஸ்டர்’, ‘ஃபர்ஹானா’ போன்ற திரைப்படங்களை இயக்கி வரவேற்பை பெற்றார்.இவர் தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார். அதர்வா கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடிக்கிறார்.

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் ஆக்ஷன் திரில்லர் பாணியில் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.டி.என்.ஏ போஸ்டர்இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு படக்குழு ‘டி.என்.ஏ’ என தலைப்பு வைத்துள்ளது. மேலும், இது தொடர்பான போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.”,

atharvaa-movie title update
atharvaa-movie title update