Atharva join with a famous director for the first time
‘சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’, ‘யுத்தம் செய்’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘பிசாசு’, ‘துப்பறிவாளன்’, ‘சைக்கோ’ என தொடர்ந்து வெற்றி படங்களை இயக்கிய மிஷ்கின், தற்போது பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதேபோல் நடிகர் விஜய் சேதுபதியும் கவுரவ வேடத்தில் நடித்து இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.
இந்நிலையில், இயக்குனர் மிஷ்கின் அடுத்ததாக இயக்க உள்ள படத்தில் நடிகர் அதர்வா நாயகனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டணி உறுதியானால், அவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றும் முதல் படமாக இது அமையும். தற்போது நடிகர் அதர்வா கைவசம் குருதி ஆட்டம், அட்ரஸ், தள்ளிப்போகாதே போன்ற படங்கள் உள்ளன.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
ஸ்ருதி முடிவு ஒன்று எடுக்க, நீத்து செய்த செயலால் கடுப்பாகி உள்ளார் ரவி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சியின் 9வது சீசன் கடந்த…
“பேட்ரியாட்” படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு நயன்தாரா நடித்துள்ள பேட்ரியாட்' படத்தின் தகவல்கள் பார்ப்போம்... மம்முட்டி, மோகன்லால் இருவரும் 19…
கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. அதனைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான்…
விஜய்யின் கடைசிப்படமான 'ஜனநாயகனுக்கு, முதல்படமான 'நாளைய தீர்ப்பு'.. விஜய் நடிப்பில் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படத்திற்கு…