Arun Vijay to play villain in Lingusamy
தமிழில் ஆனந்தம், ரன், பையா, சண்டக்கோழி என பல்வேறு ஹிட் படங்களை கொடுத்த லிங்குசாமி, தற்போது தெலுங்கில் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் படத்தை அவர் இயக்க உள்ளார்.
இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாக உள்ளது. இப்படத்தில் ராம் பொத்தினேனிக்கு ஜோடியாக இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்க உள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.
அதிரடி ஆக்ஷன் படமாக உருவாக உள்ள இப்படத்தில், வலுவான வில்லன் கதாபாத்திரம் ஒன்றை உருவாக்கி உள்ளாராம் லிங்குசாமி. மேலும் அந்த கதாபாத்திரத்தில் முன்னணி நடிகரை நடிக்க வைக்க அவர் திட்டமிட்டுள்ளாராம். ஏற்கனவே மாதவனிடம் பேச்சுவார்த்தை நடந்ததாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது அருண் விஜய்யிடமும் பேசி வருகிறார்களாம்.
இவர்கள் இருவரில் யார் வில்லனாக நடிக்க சம்மதிப்பார்கள் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். நடிகர் அருண் விஜய் ஏற்கனவே அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
https://youtu.be/dvAzQ4AW8XI?si=RwyVAUT4ydauDrvI
Rai Rai Raa Raa Song (Tamil) , Peddi ,Ram Charan , Janhvi , Buchi Babu…
Leader - Official Teaser ,Legend Saravanan , R. S. Durai Senthilkumar ,Ghibran Vaibodha https://youtu.be/2bdOxrr7Kvw?si=vUGe3Af95s-SSkqU
https://youtu.be/VI6Ugwjt7Ho?si=I4bWwA71FYPUW7s-
டாக்ஸிக் ரிலீஸ் தேதியில் அந்த படத்தை இறக்கும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு! கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும்…
எப்படிப்பட்ட மனைவியாக இருக்க விரும்புகிறீர்கள்? - ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. 'காதல் கல்யாணம்' பற்றி ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. *…