Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வலிமை ரிலீசுக்காக வெயிட்டிங்.. பிரபல நடிகரின் வைரலாகும் ட்வீட்

Arun Vijay About Valimai Movie Release

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பாலிவுட் நடிகை ஹூமா குரோஷி நாயகியாக நடிக்க தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடித்துள்ளார்.

உலகம் முழுவதும் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்திற்கு டிக்கெட் புக்கிங் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பிரபல நடிகர் அருண் விஜய் வலிமை படத்திற்காக வெறித்தனமாக காத்துக் கொண்டிருப்பதாக டுவிட் செய்துள்ளார்.

இவருடைய இந்த பதிவை சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. அருண் விஜய் அஜித்துக்கு வில்லனாக என்னை அறிந்தால் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் அவரது திரைப்பயணத்தில் மிகப்பெரிய மைல்கல்லாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.