Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“எளிமையாக நடித்து விட்டார்”தனுஷ் குறித்து பேசிய இயக்குனர் அருண் மாதேஸ்வரன்

arun-madeshwaran-recent-interview-goes-viral

தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் ‘கேப்டன் மில்லர்’. அருண் மாதேஸ்வரன் இயக்கி இருக்கும் இந்த படம் ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது.இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.இந்நிலையில், ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் தனுஷ் நடித்தது குறித்து இயக்குனர் அருண் மாதேஸ்வரன் கூறியுள்ளார்.

நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட அவர், \”படத்தில் ரொம்ப எமோஷனலான மூன்று காட்சிகள் உள்ளது. அவ்வளவு ஆழமாக நான் காட்சிகள் இதுவரை எடுத்ததில்லை. இந்த காட்சி செய்யும் போது தனுஷ் எப்படி செய்வார் என்று நினைத்தேன். ஆனால் அவர் மிகவும் எளிமையாக நடித்துவிட்டார். எனக்கு அப்போது இந்த காட்சியை பார்க்கும் பொழுது விருப்பமே இல்லாமல் தனுஷ் நடித்த மாதிரி இருந்தது. ஆனால், எடிட்டிங்கில் பார்க்கும் பொழுது மிகவும் அருமையாக இருந்தது. ஒரு சில காட்சிகள் ‘அசுரன்’, ‘மயக்கம் என்ன’ போன்ற படங்கள் மாதிரி நடித்திருப்பார். எமோஷனலான காட்சிகள் தனுஷிற்கு மிகவும் பிடித்தது\” என்று பேசினார்.”

arun-madeshwaran-recent-interview-goes-viral
arun-madeshwaran-recent-interview-goes-viral