தமிழ் சினிமாவில் காமெடி மூலம் கருத்துக்களை சொல்லி ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் விவேக். இவர் மாரடைப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனிற்றி இன்று காலை 4.35 மணியளவில் காலமானார்.
இவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் பலரும் நேரில் அஞ்சலியும், சமூக வலைத்தளத்தில் இரங்கல் செய்தியையும் பதிவு செய்து வருகிறார்கள்.
இந்நிலையில், நடிகர், தயாரிப்பாளர் மற்றும் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர், விவேக்குடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து, அப்துல் கலாம் அய்யாவின் கனவுகளை நிஜமாக்கிய கலைஞன்…, சக கலைஞர்களையும் ஊக்குவித்த மகா கலைஞன்… சகோதரர் விவேக்கின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு’ என்று இரங்கல் செய்து வெளியிட்டுள்ளார்.