Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

முதல்முறையாக மலையாள சினிமாவில் ஹீரோவாக நடிக்கப் போகும் அர்ஜுன் தாஸ். முழு விவரம் இதோ

arjun-das-to-debut-in-malayalam movie

கைதி படத்தின் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் அர்ஜுன் தாஸ். இயக்குநர் வசந்தபாலனின் அநீதி படத்தில் நாயகனாக அறிமுகமானார். தற்போது, இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் உருவாகும் ரசவாதி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், மலையாளத்தில் நகைச்சுவை கலந்த காதல் படத்தில் நடிக்க உள்ளதாக அர்ஜுன் தாஸ் அறிவித்து உள்ளார். இயக்குநர் அஹமது கபீர் இயக்கும் இப்படத்தின் மூலம் மலையாளத்தில் அவர் அறிமுகமாகிறார்.கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற லோகேஷ் கனகராஜ் படங்களின் மூலம் பிரபலமான அர்ஜுன் தாஸ், முதன்முறையாக மலையாள சினிமாவுக்கு ஹீரோவாக வருகிறார்.

ஜூன் மற்றும் மதுரம் மற்றும் ‘கேரளா க்ரைம் பைல்ஸ்’ என்ற வெப் சீரியலுக்குப் பிறகு அகமது கபீர் புதிய படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு ஹிஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். படத்தின் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் படக்குழுவினர் பற்றிய எந்த தகவலும் வெளியாகவில்லை. தற்போது இப்படம் காதலை மையமாக வைத்து எண்டர்டெயினராக இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் இதில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

arjun-das-to-debut-in-malayalam movie
arjun-das-to-debut-in-malayalam movie