தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகும் கலவையான விமர்சனங்களை பெற்றது பீஸ்ட் திரைப்படம். இந்தப் படத்தை தொடர்ந்து விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். இது குறித்த அதிகாரப்பூர் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. அதே சமயம் இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக ஆறு நடிகர்கள் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இப்படியான நிலையில் தற்போது விஜய்க்கு வில்லனாக நடித்த நடிகர் அர்ஜுனிடம் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது. மாஸ்டர் படத்தில் பவானி கதாபாத்திரத்தை அர்ஜுனையில் வைத்து தான் எழுதினார் லோகேஷ் கனகராஜ். ஆனால் வில்லன் வேடம் என்பதால் அர்ஜுன் இதனை மறுத்துவிட்டார்.
மாஸ்டர் மற்றும் விக்ரம் பட வில்லன் கதாபாத்திரங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்றதால் இந்த படத்தில் நடிக்க அர்ஜுன் ஓகே சொல்லுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
