அரியவன் படத்தின் மோஷன் போஸ்டர் வைரல்.

திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் ஜவஹர் மித்ரனின் அடுத்த படைப்பான அரியவன் என்ற புதிய படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர், நடிகர் விஜய் சேதுபதியால் நேற்று (12-02-2023) வெளியிடப்பட்டது. இதில் அறிமுக நாயகன் ஈஷான் மற்றும் அறிமுக நாயகி ப்ராணலி ஆகியோர் களமிறங்கியுள்ளனர். இத்திரைப்படம் சமூகத்தில் பெண்கள் மீதான பல்வேறு வன்முறைகளுக்கு தீர்வு காணும் விதமாக எடுக்கப்பட்டுள்ளது. மாரிச்செல்வன் கதை எழுத, எடிட்டிங் மா தியாகராஜன் மற்றும் ஒளிப்பதிவு கே எஸ் விஷ்ணு ஸ்ரீ மேற்கொள்ள, எம் ஜி பி மாஸ் மீடியா நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வழங்குகிறது.

முக்கிய கதாபாத்திரங்களில் டேனியல் பாலாஜி, சத்யன், கல்கி ராஜா, ரமா, ரமேஷ் சக்ரவர்த்தி, சூப்பர் குட் சுப்ரமணி, ரவி வெங்கட்ராமன் உள்பட பலர் நடித்திருக்கின்றனர்.

இப்படத்தின் பாடல்கள், டீஸர் மற்றும் ட்ரெய்லர் விரைவில் வெளிவர உள்ளது. இந்த நிலையில் படத்தின் மோஷன் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் படத்தை வருகிற மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியிட படக்குழு முழுவீச்சில் வேலை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Ariyavan Motion Poster viral
jothika lakshu

Recent Posts

House Husband Lyric Video

House Husband Lyric Video | Gatta Kusthi 2 | Sean Roldan | Vishnu Vishal, Aishwarya…

16 hours ago

Pere Illa Lyrical Video

Pere Illa Lyrical Video | Sing Geetham | Singeetham Srinivasa Rao | Devi Sri Prasad…

16 hours ago

Adakuna Adakuna Lyric Video

Adakuna Adakuna Lyric Video | Dark | Ajay Karthi | Manu Ramesan | Anthony Daasan…

16 hours ago

தென்னிந்திய சினிமாவை ஆக்கிரமிக்கும் கயாடு லோஹர்!

‘டிராகன்’ திரைப்படம் மற்றும் ‘பவள மல்லி’ மியூசிக் ஆல்பம் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை கயாடு லோஹர்,…

16 hours ago

“இதயம் முரளி’ மாதிரியான படங்களில் இனி நடிக்க மாட்டேன்!” – அதர்வாவின் வெளிப்படையான பேட்டி

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா உள்ளிட்டோருடன் இணைந்து அதர்வா நடித்துள்ள 'பராசக்தி' திரைப்படம், அவரது திரைப்பயணத்தில் முக்கியமான…

17 hours ago

‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸுக்கு ஜூலை 31 வரை அவகாசம்; சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

நடிகர் விக்ரம் நடிப்பில், இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய 'துருவ நட்சத்திரம்' திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் ஜூலை…

17 hours ago