கணினி மற்றும் மொபைல் அதிகம் பார்ப்பவர்களுக்கு கண் பார்வை பாதிக்கப்படுகிறது.
கணினி மற்றும் மொபைல்களில் இருந்து வரும் திரை ஒளி நம் கண்களுக்குத் தீங்கை விளைவிக்கிறது. இது அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும். தொடர்ந்து நாம் கணினியை பார்க்கும்போது கண்களில் எரிச்சல் அரிப்பு அதிகமாகி கண் பார்வை பலவீனம் ஆகும்.
கண்பார்வைக்கு சிறந்த உணவாக கருதப்படுவது ஆம்லா என்னும் நெல்லிக்காய். இதில் இருக்கும் வைட்டமின் சி கண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
கண் பார்வையை அதிகரிக்க நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவு கேரட். இதில் வைட்டமின் ஏ அதிகமாக இருப்பதால் கண்களுக்கு சிறந்தது. இது மட்டும் இல்லாமல் பச்சை காய்கறிகளை அதிகமாக எடுத்துக் கொண்டால் அதில் இருக்கும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் மற்றும் இரும்பு கண்பார்வையை அதிகரிக்க உதவுகிறது.
இதனைத் தொடர்ந்து அவகேடோ சாப்பிட்டால் கண்களில் உள்ள விழித்திரை வலுப்பெற்று கண்கள் ஆரோக்கியமாக இருக்கும்.
குறிப்பாக சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு எலுமிச்சை திராட்சை கொய்யா போன்ற பழங்களை சாப்பிட வேண்டும்.
விழித்திரையை வலிமைப்படுத்த டி எச் எ எனப்படும் கொழுப்பு அமிலம் இருக்கும் கடல் உணவுகளை சாப்பிட வேண்டும். இறுதியாக உலர் பழங்களை தினமும் சாப்பிட்டால் கண்களுக்கு சிறந்த மருந்தாக இருக்கும்.