பாதாமை அதிகம் சாப்பிடும் போது அது உடலுக்கு சில பக்க விளைவுகளையும் ஏற்படுகிறது.
பொதுவாகவே உடலுக்கு ஊட்டச்சத்து தரும் பொருட்களின் முக்கியமான ஒன்று பாதாம். இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் இருப்பது அனைவருக்கும் தெரியும் இது மட்டும் இல்லாமல் பல்வேறு நோய்களை குணப்படுத்தவும் இது உதவுகிறது. ஆனால் பாதாம் அதிகமாக சாப்பிட்டால் அது நம் உடலுக்கு சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும் என்பதை நாம் தெரிந்து கொள்வோம்.
பாதாமில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்து வயிற்றுப்போக்கு அல்லது வயிற்று வலியை ஏற்படுத்தி விடும்.
குறிப்பாக பாதாமை பச்சையாக சாப்பிடுவதை தவிர்த்து ஊற வைத்து சாப்பிட்டால் நல்லது.
இது மட்டும் இல்லாமல் அலர்ஜி தொண்டை புண் வரவும் வாய்ப்பு உள்ளது. பாதாமை அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது அது உடலில் இருக்கும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி உடலுக்கு தீங்கை விளைவிக்கும்.
பாதாமை ஊறவைத்து சாப்பிடும்போது உடல் எடை குறைய வாய்ப்புள்ளது. சிறுநீரக கல் பிரச்சனை இருப்பவர்கள் பாதாம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
எனவே பாதாமில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் உடலுக்கு ஆரோக்கியமும் இருந்தாலும் அதனை அளவிற்க்கு அதிகமாக சாப்பிடும் போது அது நம் உடலுக்கு தீங்கை விளைவிக்கும் என்பதை அறிந்து அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.