கரும்பு ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்.
கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள பல்வேறு பானங்களை குடிப்பது முக்கியமான ஒன்று. அதிலும் குறிப்பாக கரும்புச்சாறு விரும்பி குடிப்பார்கள். ஆனால் அதனை அளவிற்கதிகமாக குடிக்கும்போது நம் உடலுக்கு சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று உங்களுக்கு தெரியுமா? அதனை குறித்து நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
கரும்பு ஜூஸில் அதிகம் சர்க்கரை இருப்பதால் அதிகமாக குடிப்பதை தவிர்ப்பது நல்லது.
இது மட்டும் இல்லாமல் எந்த ஒரு பழங்களையும் ஜூஸ் ஆக இல்லாமல் பழங்களாக சாப்பிடுவதனால் மட்டுமே உங்களுக்கு ஆரோக்கியம் அதிகமாக கிடைக்கிறது.
கரும்புச் சாறு அதிகமாக குடிக்கும் போது ஒவ்வாமை மற்றும் தலைசுற்றல், தலைவலி போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.
குறிப்பாக உடல் எடையை குறைத்து விடும். மேலும் தூக்கமின்மையை ஏற்படுத்தும்.
எனவே எந்த ஒரு உணவையும் அளவோடு சாப்பிட்டால் மட்டுமே அது நம் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் அளவிற்கு அதிகமாக சாப்பிடும் போது ஆரோக்கியம் தரும் உணவுகளும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறிந்து எந்த ஒரு உணவையும் அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.

