Tamilstar
Health

உலர் திராட்சை அதிகம் விரும்பி சாப்பிடுபவர்களா நீங்கள்? அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்காக..!

Are you a big fan of raisins? So these tips are fo

உலர் திராட்சையை அதிகமாக சாப்பிடும் போது வரும் தீமைகள் குறித்து பார்க்கலாம்.

நம் உடலுக்கு பல்வேறு ஆரோக்கியங்களை தரும் உணவு பொருட்களில் முக்கியமான ஒன்று உலர் திராட்சை. உலர் திராட்சை சாப்பிடும் போது எண்ணற்ற ஊட்டச்சத்துக்களை கொடுத்து பல்வேறு விதத்தில் நன்மையை கொடுக்கிறது. ஆனால் அதை அதிகமாக சாப்பிடும் போது அது நம் உடலுக்கு தீங்கை விளைவிக்கிறது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

நீரிழிவு நோயாளிகள் அளவிற்கு அதிகமாக உலர் திராட்சை சாப்பிடும் போது ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை அதிகரிக்க அதிகமாக வாய்ப்பு உள்ளது .இது மட்டும் இல்லாமல் சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் வர வாய்ப்புள்ளது.

மேலும் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை உருவாக்கி உடல் எடையை அதிகரிக்கவும் செய்கிறது.

எனவே உலர் திராட்சையில் ஆரோக்கியம் இருந்தாலும் அதனை அளவிற்கு அதிகமாக சாப்பிடும் போது அது உடலுக்கு தீங்கை விளைவிக்கும் என்பதை அறிந்து அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.