Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிக் பாஸ் சீசன் 6 கலந்து கொள்ளும் விஜய் டிவி சீரியல் பிரபலம்..

archana-participate-in-bigg-boss-6 update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கோலாகலமாக தொடங்க உள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் விரைவில் தொடங்கும் என ப்ரோமோ வீடியோக்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

அதே சமயம் இந்த சீசனில் போட்டியாளர்களாக பங்கேற்க போவது யார் என்ற தகவல்களும் அலசல் புரசலாக அடிபட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது போட்டியாளர்களில் ஒருவராக ராஜா ராணி 2 அர்ச்சனாவும் பங்கேற்கிறார் என தகவல்கள் வெளிவந்துள்ளன.

அதாவது இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகவே அவர் ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகிக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதோடு தொகுப்பாளினி டிடி, ரக்சன் இந்த நிகழ்ச்சி பங்கேற்க போவதாக சொல்லப்படுகிறது.

 archana-participate-in-bigg-boss-6 update

archana-participate-in-bigg-boss-6 update