தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் லியோ திரைப்படம் வெளியானதை தொடர்ந்து தற்போது தளபதி 68 என்ற திரைப்படம் உருவாக்கி வருகிறது.
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று வெங்கட் பிரபுவின் பிறந்தநாள் என்பதால் அர்ச்சனா கல்பாத்தி இந்த படம் குறித்த அப்டேட்டை வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளார்.
அதாவது, படத்தின் முக்கிய சண்டைக்காட்சி ஒன்று தாய்லாந்தில் படமாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். அதோடு நைட் ஷூட் வெங்கட் பிரபுவுக்கு பிறந்தநாள் என்பதால் அவர் லீவ் எடுத்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்த பதிவுடன் சேர்த்து வெங்கட் பிரபுவுடன் எடுத்துக் கொண்ட போட்டோவையும் வெளியிட்டுள்ளார்.
Happiest bday to our mad genius @vp_offl. Here is wishing you the best of everything . To many more crazy shoot days and schedules for #Thalapathy68 ( Update : Major Action Block being shot in Thailand and yesterday was a night shoot so @vp_offl gets a holiday on his bday ????) pic.twitter.com/fBVgUv5zo0
— Archana Kalpathi (@archanakalpathi) November 7, 2023