தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவர் தற்போது இயக்குனர் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து தல அஜித் அவர்கள் இறுதிச்சுற்று, சூரரைப்போற்று ஆகிய படங்களை இயக்கிய பெண் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
அதுமட்டுமல்லாமல் இந்த படத்தை தளபதி விஜயின் பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. இதனால் அந்நிறுவனத்தின் உரிமையாளரான அர்ச்சனா கல்பாத்தி தல அஜித்தை சந்தித்து அவருடன் கதை குறித்த விவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது அர்ச்சனா கல்பாத்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நாங்கள் யாரையும் சந்திக்கவும் இல்லை, எதையும் விவாதிக்கவும் இல்லை. ஆனால் அவருக்காக காத்துக் கொண்டிருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
இதனால் தல 61 படத்தை தயாரிக்க உள்ளதாக வெளியான தகவல் உண்மையல்ல. ஆனால் அஜித் படத்தை தயாரிக்க காத்துக் கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.
No we have not met anyone or had any discussions. We are just waiting ????????
— Archana Kalpathi (@archanakalpathi) September 10, 2020

