தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் டைட்டிலை வென்று சாதனை படைத்துள்ளார் அர்ச்சனா.
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர் பிரதீப் ஆண்டனி குறித்து பேசியுள்ளார்.
அதாவது, பிக் பாஸ் நிகழ்ச்சியின் சவாலான போட்டியாளர் என்றால் அது பிரதீப் தான். நான் முதல் முதலாக உள்ளே சென்று ஆச்சிரியப்பட்ட நபர் அவர் தான். ஏனென்றால் அவரிடன் நாம் என்ன பேசினாலும் உடனே அம்பு போன்று ஒரு பதில் வரும்.
அதற்கு பிறகு அவருக்கும் எனக்கும் இடையே ஒரு நல்ல பழக்கம் வந்தது. என் உடைகளை பல முறை ஹீட் செய்து கொடுத்து இருக்கிறார். அது எல்லாம் மறக்கவே மாட்டேன். எப்போதும் ஏதாவது யோசித்து கொண்டே இருப்பார் என தெரிவித்துள்ளார்.
