Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

500 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த அரபிக் குத்து. வைரலாகும் பதிவு

arabic-kuthu-song-latest-update

தமிழ் சினிமாவில் இளைய தளபதியாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நடிகர் விஜய்யின் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகி இருந்த வாரிசு திரைப்படம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழ் மட்டுமின்றி பிற மொழிகளிலும் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் அடித்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. தில் ராஜு தயாரிப்பில் தமன் இசையமைப்பில் வெளியான இப்படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ட்ரெண்டிங்காகி வரும் நிலையில் ரஞ்சிதமே பாடல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஆட்டம் போட வைத்து இணையதளத்தை தெறிக்க விட்டு வருகிறது.

இந்நிலையில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பீஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் இப்படத்தில் இடம்பெற்று இருந்த அரபிக் குத்து பாடல் தற்போது வரை இணையதளத்தை கலக்கி வருகிறது.

அதாவது, அனிருத் இசையமைப்பில் சிவகார்த்திகேயன் எழுதி விஜயின் மாசான நடனத்துடன் வெளியான அரபிக் குத்து பாடல் வெளியான நாள் முதலில் இருந்தே ரசிகர்களை உற்சாகப்படுத்தி இணையத்தை அதிர வைத்திருந்த நிலையில் இப்பாடல் தற்போது வரை 500 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து தொடர் வரவேற்பை பெற்று வருகிறது. இதனை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் மகிழ்ச்சியுடன் பதிவின் மூலம் தெரிவித்துள்ளது. அது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.