தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என சொல்லப்படுகிறது.
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் வரிகளில் இந்த படத்தில் இருந்து அரபிக்குத்து என்ற பாடல் வெளியாகி மிகப் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
தற்போது இந்தப் பாடல் யூ டியூபில் 70 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில் இந்த பாடலை சிம்பு ரஜினி கமல் மற்றும் அஜித் ஆகியோர் பாடினால் எப்படி பாடுவார்கள் என்ற பாணியில் ரசிகர் ஒருவர் பாடி வீடியோ வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Omg this guy…????????????????????????????????????????????????
Watch this @Nelsondilpkumar Sir#ArabicKuthu #ArabicKuththu pic.twitter.com/rgXP0Ql7gs— ☆~•••Nithiyah•••~☆ (@Karuppudevathai) February 21, 2022