ரகுமான் இந்திய சினிமாவின் அடையாளம் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு உலகம் முழுதும் மிகப்பெரிய ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர்.
இவர் இசையமைப்பில் கடைசியாக பிகில் படம் வந்த்து, இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் செம்ம ஹிட் அடித்தது.
இந்நிலையில் வளரும் கலைஞர்களை வளரவிடாமல் யாராவது வதந்திகளை பரப்பி அழிக்க பார்ப்பார்கள்.
ஆனால், இது ரகுமானுக்கே நடந்து வருகிறதாம், ஆம், ரகுமான் நல்ல படங்களுக்கு இசையமைக்க சம்மதிப்பது இல்லை என்று ஒரு செய்தி பரவி வந்தது.
இதை ரகுமான் மறுத்ததோட, இதை ஒரு சில கேங் செய்து வருவதாக ஆங்கில நாளிதழில் கூறியுள்ளார்.
இத்தனை சாதனை படைத்தவருக்கே இந்த நிலையா என்று ரசிகர்கள் ஆச்சரியமான பார்த்து வருகின்றனர்.
இதேபோன்று, ஏ.ஆர்.ரஹ்மான் மட்டுமல்ல, யேசுதாஸ், வாணி ஜெயராம் போன்ற தென்னிந்திய கலைஞர்களையும் பாலிவுட்டில் புறக்கணித்ததாக இசையமைப்பாளர்கள் சங்கத் தலைவர் தீனா கூறியுள்ளார்.
ஒருவர் குறித்து தவறாக விமர்சித்து, அதனை உண்மை என்று பரப்பி அவருக்கான வாய்ப்பை கெடுக்கும் மோசமான செயல்தான் இந்தி சினிமாவின் மிகப்பெரிய பிரச்னை என்றும், ஏ.ஆர்.ரஹ்மானும் இதன்மூலம் பாதிக்கப்பட்டுள்ளது வருத்தமளிப்பதாகவும் தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறியுள்ளார்.