இந்தியத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் ஏ ஆர் ரகுமான். ஆஸ்கர் விருது பெற்று இந்தியாவிற்கு பெருமை தேடித்தந்த இவர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா இந்த படத்தின் மூலம்தான் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
வைரமுத்து வரிகளில் இந்தப் படத்தில் இவர் இசையமைத்த ஆறு பாடல்களை சூப்பர் டூப்பர் ஹிட்டாகின. மேலும் இந்த படத்தில் இடம்பெற்றிருந்த சின்ன சின்ன ஆசை என்ற பாடலையும் ஏ ஆர் ரகுமான் பாடியிருந்தார்.
இன்று ஒரு படத்திற்கு பல கோடிகளில் சம்பளம் வாங்கும் ஏ ஆர் ரகுமான் ரோஜா படத்திற்காக வெறும் ஐந்தாயிரம் ரூபாய்தான் சம்பளம் வாங்கி உள்ளார். இந்த படத்தை தயாரித்தவர் பாலச்சந்தர். அவரின் கவிதாலயா நிறுவனத்திலிருந்து ஐந்தாயிரம் ரூபாய் காசோலையை பிரபல நடிகர் பிரமிட் நடராஜன் தான் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானுக்கு வாங்கிக் கொடுத்துள்ளார்.
இதனை அந்த நடிகரே பேட்டி ஒன்றில் சொல்ல தற்போது இந்த தகவல் சமூகவலைத்தளங்களில் பேசுபொருள் ஆகியுள்ளது.
