AR Murugadoss' next film be with him
தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபல இயக்குனர்கள் சமீப காலமாக டோலிவுட் திரையுலகுக்கு படையெடுத்து வருகின்றனர். ஏற்கனவே ஷங்கர் ராம்சரணை வைத்து படம் இயக்க தயாராகி வருகிறார். அதேபோல் இயக்குனர் லிங்குசாமியும், ராம் பொத்தினேனி நடிக்கும் படம் மூலம் தெலுங்கில் அறிமுகமாக உள்ளார். இந்தப் பட்டியலில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸும் இணைந்துள்ளார்.
ஏற்கனவே தெலுங்கில் மகேஷ் பாபுவை வைத்து ஸ்பைடர் படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ், இம்முறை அல்லு அர்ஜுனுடன் கூட்டணி அமைக்க உள்ளாராம். இப்படத்தை அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு சுரேஷ் தயாரிக்க உள்ளாராம். மேலும் இது பான் இந்தியா படமாக உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.
கடைசியாக தமிழில் தர்பார் படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ், அடுத்ததாக விஜய்யின் தளபதி 65 படத்தை இயக்க ஒப்பந்தமானார். பின்னர் சில பிரச்சனைகள் காரணமாக ஏ.ஆர் முருகதாஸ் அப்படத்தில் இருந்து விலகியதால், தற்போது நெல்சன் ‘தளபதி 65’ படத்தை இயக்கி வருகிறார்.
Thaai Kizhavi - Official Trailer , Radikaa Sarathkumar , Sivakumar Murugesan , Nivas K Prasanna…
தனுஷ் குறித்து மேடையில் பேசிய சிவகார்த்திகேயன் சிறந்த நடிகருக்கான விருது பெற்றார் எஸ்கே. அப்போது அவர் பகிர்ந்த நினைவலைகள் வைரலாகி…
திருமணத்துக்கு முன் விளம்பர பட ஷூட்டிங்கில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ராஷ்மிகா மந்தனா 'கீத கோவிந்தம், ‘டியர் காம்ரேட்’ படங்களில்…
சென்னையில் மே 30-ல் இளையராஜா சிம்பொனி இசை நிகழ்ச்சி மொழிகளுக்கு அப்பாற்பட்டது இசை. வலிகளுக்கு அருமருந்து இசை. அவ்வகையில் காலம்…
ரன்வீர் சிங்கிடம் ரூ.10 கோடி கேட்டு லாரன்ஸ் கும்பல் மிரட்டல் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச்…
விரைவில் டீஸர் உடன் வெளியாகிறதா கைதி-2 படத்தின் அறிவிப்பு? கார்த்தி நடிக்கவிருக்கும் 'கைதி-2' படமும் 'டில்லி' கதாபாத்திரமும் பற்றிய தகவல்கள்…