Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

Sk23 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்ட ஏ ஆர் முருகதாஸ். வைரலாகும் பதிவு

கஜினி படத்தைப் போன்ற வேகமான ஆக்ஷன் படமாக ‘SK23’ திரைப்படம் இருக்கும் என்று இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழில் ‘ரமணா’, ‘கஜினி’, ‘துப்பாக்கி’ “கத்தி’ போன்றப் பல வெற்றி படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ். தமிழில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு சிவகார்த்திகேயனுடன் ‘எஸ்கே23’ படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கிறார். ஶ்ரீ லக்ஷ்மி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் பூஜை கடந்த பிப்ரவரி 14-ம் தேதி நடைபெற்றது. அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடிக்கிறார்.

இந்நிலையில் ‘SK23’ படம் குறித்து ஏ.ஆர். முருகதாஸ் மனம் திறந்து பேசியுள்ளார். அதில், “இப்படத்தில் சிவகார்த்திகேயன் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். முழுக்க முழுக்க சென்னையை மையப்படுத்திய ஆக்ஷன் கதையாக இது இருக்கும். சூர்யாவின் ‘கஜினி’ படத்தில் எப்படி ஆக்ஷன் காட்சிகளை ரசித்தீர்களோ, அதுபோலவே இந்தப் படத்திலும் இருக்கும் என்று கூறியுள்ளார்.
மேலும், ஆக்ஷன் ஜானர் படமாக இது இருந்தாலும் ரொமான்ஸ் மற்றும் தனித்துவமான பல விஷயங்களை இந்த படத்தில் பார்க்க முடியும். சிவகார்த்திகேயனின் கதாபாத்திரத்திற்காக அவரது உடல்மொழியில் கவனம் செலுத்த சிறப்புப் பயிற்சியும் கொடுத்திருக்கிறோம். முதலில் மிருணாள் தாக்கூர்தான் எங்கள் சாய்ஸாக இருந்தது. ஆனால், ருக்மிணியின் வேறொரு படம் பார்த்தபோது மிருணாளை விட இவர் பொருத்தமாக இருப்பார் என்று தோன்றியதால் இவரை கதாநாயகியாக தேர்ந்தெடுத்தோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.