தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் குறைந்தது இரண்டு படங்களாவது ரிலீஸ் ஆகி வருகிறது. வலிமை எதற்கும் துணிந்தவன், RRR எனத் தொடங்கி பெரிய பட்ஜெட் படங்களாக வெளியாகி வந்த நிலையில் வரும் வாரம் அதாவது ஏப்ரல் ஒன்றாம் தேதி தமிழ் சினிமாவில் மட்டும் நான்கு சிறிய பட்ஜெட் படங்கள் வெளியாக உள்ளன.
1. மன்மத லீலை :
வெங்கட் பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்துள்ள அடல்ட் காமெடி திரைப்படம்.
2. செல்பி :
ஜிவி பிரகாஷ், வர்ஷா பொல்லாம்மா, மற்றும் கௌதம் மேனன் ஆகியோர் இணைந்து நடித்துள்ள இந்த படத்தை மதிமாறன் இயக்கியுள்ளார்.
ஏப்ரல் 1-ல் ரிலீஸ் ஆகும் 4 தமிழ் படங்கள்.. உங்க சாய்ஸ் எது? இதோ லிஸ்ட்
3. இடியட் :
மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ராம் பாலா இயக்க நிக்கி கல்ராணி, அக்ஷரா கவுடா ஆகியோர் நடித்துள்ளனர்.
4. பூச்சாண்டி வருவான் :
சிறிய பட்ஜெட் படமாக உருவாகியுள்ள பூச்சாண்டி வருவான் என்ற திரைப்படமே ஏப்ரல் ஒன்றாம் தேதி வெளியாக உள்ளது.
